ஆஸ்துமா ஆபத்து..ஜில் உணவுகள் வேண்டாமே..சுவாச கோளாறு நீக்கும் மதுரை மீனாட்சி..ஆன்மீக பரிகாரங்கள்
சென்னை: கோடை காலத்தில் வெளியே அலைந்து விட்டு வருபவர்களுக்கு ஜில்லென்று எதையாவது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ், செயற்கை குளிர்பானங்கள் குடித்து தாகத்தை போக்கிக்கொள்வார்கள். ஆனால் ஆஸ்துமா நோயாளிகள் பொதுவாக வெயிலில் வியர்க்க விறுவிறுக்க அலையக்கூடாது அதே போல குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலக ஆஸ்துமா தினம் மே 2ஆம் தேதி கடைபிடிக்கும் நாளில் ஆன்மீக ரீதியான பரிகாரங்களைப் பார்க்கலாம்.
ஆஸ்துமா நோயால் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக ஆஸ்துமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு நாளைய தினம் ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று புதன் கிழமைகளில் வழிபடுவது சுவாச கோளாறுகளை நீக்கும் என ஜோதிடர்கள் பரிகாரம் கூறியுள்ளனர்.
கால புருஷனுக்கு நான்காம் வீடான கடகம் நுரையீரலையும் சிம்மம் அதன் அடிப்பாகத்தையும் குறிக்கும். எனவே கால புருஷனுக்கு 4, 5 வீடுகளிலோ அல்லது ஜெனன ஜாதக 4, 5 வீடுகளோ சனியின் தொடர்பு பெற்றிருந்து அதனோடு சனியின் அசுப தொடர்புகள் ஆஸ்துமா வியாதியை ஏற்படுத்திவிடும்.
கால புருஷ லக்னாதிபதியான செவ்வாயும் ஆத்ம காரகன் மற்றும் கால புருஷ லக்னத்தில் உச்சமடையும் சூரியனும் புதன் சனியோடு தொடர்பு கொள்ள ஆஸ்துமா வரும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சந்திரன்தான் சளி இருமல் கோழைகட்டு போன்ற நீரினால் ஏற்படும் வியாதிகளுக்கு காரக கிரகமாகும். சளியினால் மூக்கில் நீர்வடிதல் என்பதுதான் ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறியாகும். இதனை ஏற்படுத்தும் கிரக அமைப்பு சனி சந்திர சேர்க்கையாகும்.

புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கெல்லாம் ஆஸ்துமா அல்லது சுவாச கோளாறுகள் கட்டாயம் இருக்கும் புதன்,ராகுவின் மூச்சுக்கோளாருகளை ஏற்படுத்தும். கால புருஷராசியின் இரண்டாமிடமான ரிஷபம், மற்றும் மூன்றாமிடமான மிதுனமும் மூக்கு, சுவாசம் ஆகியவற்றை குறிக்கும் பாவங்களாகும் எனவே மூச்சு மற்றும் சுவாசத்தை குறிக்கும் பாவங்கள் 2 மற்றும் 3 வீடுகள் அகும். ஆஸ்துமா சுவாச நோய் என்பதால் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கும் அதன் அதிபதிகளுக்கும் பங்குள்ளது.
செவ்வாய் சனியோடு சேர்ந்து ஆறு எட்டு 12ஆம் வீடுகளில் நின்று அந்த வீடுகள் காற்று ராசியாகவோ அல்லது நீர் ராசியாகவோ அமைந்தால் மூச்சுகோளாறு மற்றும் ஆஸ்துமா நோய் ஏற்படும். சனி நான்காம் வீட்டோடு தொடர்பு கொண்டு அந்த நான்காம் வீடு நீர் ராசி அல்லது காற்று ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும்.
சூரியன் கடகம் ராசியில் நின்று சனியின் பார்வை சேர்கை பெற்றால் ஆஸ்துமா விடாது துரத்தும். லக்னம் நீர் ராசி அல்லது காற்று ராசியாக அமைந்து லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு செவ்வாய் அல்லது சூரியனின் அசுப தொடர்பு பெற்று சனி சேர்க்கை பெற்றால் ஆஸ்துமா நோய் தாக்கும். ஒருவர் ஜாதகத்தில் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிகளும் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆறாம் வீடுகளாக அமைய பெற்றவர்களுக்கு ஆஸ்துமா சனி, புதன், சந்திரன் தசா புத்தி அந்தரங்களில் அழையாத விருந்தாளியாக ஆஸ்துமா அல்லது சுவாச நோய்கள் வந்துவிடும்
மூச்சுத்திணறல் நான்காம் வீடு மற்றும் ஆறாம் வீட்டதிபதிகள் பரிவர்த்தனை பெற்று அதில் ஒரு வீடு காற்று அல்லது நீர் ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும். காலபுருஷ நான்காம் வீட்டதிபதியான சந்திரனும் ஆறாம் வீட்டதிபதியான புதனும் பரிவர்தனை பெற்று சனி தொடர்பும் பெற்றுவிட்டால் தீவிர ஆஸ்துமா நோய் அல்லது மூச்சுதிணறல் நோய் ஏற்படும்.
சுக்கிரன் ஒருவருக்கு ஆறு, எட்டு 12ஆம் அதிபதிகளாகவோ அல்லது கடகம், கன்னி,விருச்சிகம்,மீனம் ராசிகளில் நின்றுவிட்டாலோ அவரோடு சந்திரன் சேர்க்கை பெரும்போதெல்லாம் நீரினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் தாக்கும். புதன் சேர்க்கை பெரும்போதெல்லாம் ஆஸ்துமாவும் சனி பார்வை அல்லது சேர்க்கை பெரும்போதெல்லாம் தீவிர ஆஸ்துமாவும் வந்துவிடுகிறது.
காலபுருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தை ஆஸ்துமாவிற்கான பாவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்சத்துமிக்க உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தாலே போதும் ஆஸ்துமாவிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம். அதிக குளிர்ச்சி தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தயிர், குளிர்பானம், குளிர்ந்த நீர் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஃப்ர்ட்ஜ்ஜில் வைத்து குளிர்ந்த உணவுகளை சாப்பிடகூடாது. வெளி இடங்களில் அதிகமாக கூல் டிரிங்க்ஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சளி பிடிப்பதும் சனி பிடிப்பதும் ஒன்று என சளியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். எனவே சுவாசத்தை குறிக்கும் வாயு கிரகமான சனி பகவானை வழிபட்டாலே ஆஸ்துமா மற்றும் சுவாசநோயிலிருந்து தப்பலாம். தினசரி சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சிகள் செய்வதும் சிறந்த பலனளிக்கும். செவ்வாய் பரிகார ஸ்தலங்களான வைதீஸ்வரன் கோயில், ஆஸ்துமா நோயிற்கான சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
வாயு ஸ்தலம் மற்றும் ராகு பரிகார ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று புதன் நட்சத்திரங்களான ஆயில்யம்-கேட்டைரேவதி நட்சத்திரங்களில் வழிபடுவது மற்றும் பரிகாரங்கள் செய்வது சிறந்த பலனளிக்கும். புதன் ஸ்தலமான திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று புதபகவானை புதன் கிழமைகளில் வழிபடுவது சுவாச கோளாறுகளை நீக்கும்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications