பொன்னும் பொருளும் வீட்டில் சேர.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கலாம்? ஒவ்வொரு நாட்களின் விசேஷ சிறப்பு
சென்னை: வீட்டில் தாங்க முடியாத அளவுக்கு கஷ்டமும், வறுமையும் நிலவுகிறதா? கழுத்தை நெரிக்கும் கடடினில் சிக்கியிருக்கிறீர்களா? காரணமே தெரியாமல் குடும்ப உறுப்பினர்கள் நோய் நொடியில் விழுந்துவிடுகிறார்களா? அப்படியானால், கடவுள்களை முறையாக வணங்கி, உங்கள் பிரார்த்தனைகளை சொல்லி வந்தாலே தீர்வு காணலாம்..
இதற்காகவே எந்தெந்த நாளில் எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை
சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள்தான் ஞாயிற்றுக்கிழமை.. புராணங்களில் சூரியனுக்கு நிறையவே முக்கியத்துவம் உண்டு. பூமியில் மனித குலத்தை வாழ்விக்க வந்ததே சூரிய பகவான் என்பது மக்களின் நம்பிக்கையாகும்,. ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் குளித்துமுடித்து, காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பிரசாதம் வழங்க வேண்டும். அத்துடன் நோன்பை கடைப்பிடித்து சூரியனை வணங்கினால், உடலும், உள்ளமும் சுத்தமாகும்
விரதத்தின்போது, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே, பூண்டு, வெங்காயம், உப்பு இல்லாத உணவை சாப்பிட வேண்டும். சிவப்பு நிறம் சூரிய பகவானுடன் தொடர்புடையது என்பதால், கடவுளை வணங்கும்போது சிவப்பு ஆடைகளை அணியலாம். நீங்கள் சிவப்பு நிற பூக்களை சூரியனுக்கு படைக்கலாம்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமையானது சிவபெருமானுக்குரிய நாளாகும்.. சிவன் கோவிலுக்கு சென்று சிவன் - பார்வதியை வணங்கிவருவதால் குடும்பம் விருத்தியாகும்.. திங்கட்கிழமை நோன்பு நோற்கும்போது, பக்தர்களுக்கு அமைதி, நீண்ட ஆயுள், ஆரோக்கியமும் கிடைக்கிறது.. அதிகாலையில் குளித்துவிட்டு சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து, சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்,. 'ஓம் நம சிவாயே' என்று மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்நாளில் வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்... மறந்தும் கருப்பு நிற ஆடையை அன்றைய தினம் அணிய கூடாது.
அனுமனுக்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமை கருதப்படுகிறது.. அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து, அனுமனுக்கு சிவப்பு, ஆரஞ்சு பூக்களை வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.. இதனால் வாழ்வில் ஏற்படும் தடைகள், அச்சங்கள் விலகும்.
புதன்கிழமை
புத்தி, கற்றல் மற்றும் கலைகளின் கடவுளான விநாயகருக்குரிய நாளாக புதன்கிழமை கருதப்படுகிறது. எதிர்மறை மற்றும் தடைகளை நிராகரிப்பவராகவும் அவர் கருதப்படுகிறார். முதற் கடவுளான விநாயகரை வணங்கும்போது, பச்சை புல், மஞ்சள், வெள்ளை பூக்கள், வாழைப்பழம், இனிப்புகளை சுத்தமான வாழை இலையில் படைக்கலாம். பச்சை மற்றும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து 'ஓம் கணேஷய் நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
விஷ்ணுவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமை, சாய் பாபாவுக்கு சிறப்புக்குரிய நாளாகும்.. விஷ்ணு மற்றும் பிரஹஸ்பதிக்கு பிடித்தமான மஞ்சள் ஆடைகளை அணிந்து, வணங்கினால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்.. 'ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
வெள்ளிக்கிழமை
மகாலட்சாமி, துர்கா, அன்னபூர்னேஸ்வரி தேவிக்கு உரிய நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது.. இந்த 3 தேவிகளையும் வணங்கி வந்தால், வாழ்வின் செழிப்பு, செல்வம், நேர்மறை, மனநிறைவு கிடைக்கும்,. விடிகாலையில் குளித்துவிட்டு, வெள்ளை பூக்கள் மற்றும் பிரசாதங்களை வழங்கி தெய்வங்களை வணங்க வேண்டும். இவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவதற்காக வெல்லம், சுண்டல், நெய் மற்றும் பால் பொருட்கள் (தயிர் தவிர) வழங்கலாம். இறுதியாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் உணவை உட்கொள்ள வேண்டும்.
சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள்தான் சனிக்கிழமை... ஒருவரின் செயல்களை பொறுத்தே அவர்களது பலாபலன்கள் தரக்கூடியது சனிபவான்தான். அதனால்தான் சனி பகவானுக்கு பலரும் பயப்படுகிறார்கள்.. சனிக்கிழமைகளில் சனியை வணங்குவது மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதி வடிவத்தில் பகவான் சனியிடமிருந்து நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும் தரும் என்று கூறப்படுகிறது. சடங்குகள் பகவான் சனியைப் பிரியப்படுத்தவும், எந்தவிதமான தடைகளையும் தவிர்க்கவும் இந்த நாளில் அனுசரிக்கலாம். கறுப்பு நிற ஆடைகளையும் அணியலாம்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications