நைஜீரியாவின் போராட்டம் தோல்வி - அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி

வெற்றிக்காக கடுமையாகப் போராடியும் வெற்றி பெற முடியாமல் துவண்டு போனது நைஜீரியா.
விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அதேசமயம் வெற்றிக்காக நைஜீரியா கடுமையாகப் போராடியது. இருப்பினும் நைஜீரியாவின் முயற்சி வெற்றி பெற முடியவில்லை. காப்ரியல் ஹெய்ன்ஸ் அடித்த ஒரு கோலால் நைஜீரியாவை 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் அர்ஜென்டினாவுக்கு நிறைய கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நைஜீரியாவின் அபாரமான தடுப்பு முறைகள் உள்ளிட்டவை காரணமாக அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
போட்டி தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜூவான் செபாஸ்டியன் வெரோனிடமிருந்து வந்த பந்தை தலையில் வாங்கி முட்டி கோலாக்கினார் ஹெய்ன்ஸ். அதன் பிறகு அவர்களால் கோலடிக்கவே முடியவில்லை.
கோன்சலோ ஹிகுயினுக்கு 3 வாய்ப்புகளும், மெஸ்ஸிக்கு 4 முறையும் கோலடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நைஜீரிய கோல் கீப்பர் வின்சன்ட் எனிமா அவற்றை அபாரமாக தடுத்து விட்டார்.
முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் திணறியபோதிலும், 2வது பாதி ஆட்டத்தில் நைஜிரியர்கள் கோலடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அவர்களால் மெஸ்ஸியின் அபார தடுப்பைத் தாண்டிப் போகவே முடியவில்லை.
தனது அபாரமான தடுப்பாட்டத்தால் நைஜீரியர்களின் கோல் குறிக்கோளை மிக அழகாக தடுத்தார் மெஸ்ஸி.
முதல் போட்டியில் வென்ற போதிலும், நிறைய கோல்கள் அடிக்க முடியாமல் போனது அர்ஜென்டினா வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் இந்த வெற்றி குறித்து பயிற்சியாளர் மாரடோனா திருப்தி தெரிவித்தார்.
முதல் முறையாக அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக மாரடோனா நேற்றைய ஆட்டத்தில் கலந்து கொண்டார். அட்டகாசமான தாடி, மீசை, கோட் சூட்டில் மிடுக்காக காணப்பட்ட மாரடோனாவுக்கு ரசிகர்கள் கைகளைத் தட்டியும், குரல் எழுப்பியும் தொடர்ந்து உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications