ஏடாகூட ஏர்டெல்.. அவசர ஆத்திரத்துக்கு கூட போன் பண்ண முடியல! புலம்பும் வாடிக்கையாளர்கள்! ஜியோவுமா?
சென்னை: தமிழகத்தின், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக (Airtel Down) பயனர்கள் புகார் கூறி உள்ளனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வாடிக்கையாளர்களை அழைக்க முடியவில்லை என்றும் இன்டர்நெட் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக டவுன்டிடெக்டர் இணையதளத்தில் 8000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதேபோல ஜியோ நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கின்றனர்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வந்த ஏர்செல் மூடப்பட்ட பிறகு ஏர்டெல், ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன.
குறிப்பாக ஏர்டெல், ஜியோ ஆகியவை தற்போது தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாலை 6:30 மணியிலிருந்து ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களையும் பிற வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் கூறுகின்றனர் பயனர்கள். மேலும் இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசர தேவைக்கு கூட அழைக்க முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் சேவை முடக்கப்பட்டதா? சர்வர் பிரச்சினையா என்ன பிரச்சனை என பலரும் ஏர்டெல் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்.
இதேபோல சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் புகார் எழுந்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 3 சதவீதம் சரிந்ததாக இன்று தான் அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதற்கிடையே ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சேவை குறைபாடு குறித்து புகார் அளிக்கும் டவுன் டிடெக்டரில் 7 மணியிலிருந்து ஏர்டெல் சேவை தொடர்பாக புகார்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. 9 மணி நிலவரப்படி 8314 பேர் சேவை குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கின்றனர். சிக்னல் இல்லை என 63 சதவீதம் பேரும், மொபைல் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என 13 சதவீதம் பேரும், மொபைல் பிரச்சனை என 24 சதவீதம் பேரும் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இதே போல குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இதே போல ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பலமுறை அந்த நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக டவுன் டிடெக்டரில் புகார்கள் பதிவாகியுள்ளது. குறிப்பாக மாலை 7 மணியில் இருந்து தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் சேவை குறைபாடு இருப்பதாக புகார் கூறியிருக்கின்றனர். மொபைல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக 52 சதவீதம் பேரும், jio ஃபைபர் வேலை செய்யவில்லை என 37 சதவீதம் பேரும், சிக்னலே கிடைக்கவில்லை என 11 சதவீதம் பேரும் புகார் கூறியிருக்கின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications