5 ஜி யூஸ் பண்ணுறீங்களா.. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் எடுத்த முடிவு.. வாடிக்கையாளர்கள் ஷாக்!
சென்னை: 5ஜி சேவைகளுக்கு 5 - 10% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொலை தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஆரம்பத்தில் வெளியிட்டு வந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் ஆனது. வாடிக்கையாளர்களே எதிபார்க்காத அளவுக்கு ஜியோ சலுகளை அள்ளி வீசியது.

அதன்பிறகு கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது 5 ஜி இணைய சேவையை செல்போன் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி கட்டணத்திலேயே 5 ஜி சேவையையும் வழங்கி வருகின்றன. அதுபோக அன்லிமெட்டெடு 5 ஜி சேவையும் தற்போது வழங்கப்படுகிறது.
5 ஜி சேவை கட்டணம்: 4 ஜி சேவையுடன் ஒப்பிடும் போது 5 ஜி நெட்வொர்க்கின் வேகம் பலமடங்கு என்பதால் வாடிக்கையாளர்களும் 5 ஜி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தற்போது 5 ஜி சேவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஏண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 5 ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது வருவாயை பெருக்கும் விதமாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5 ஜி சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 ஜி அன்லிமிட்டடு சேவையையும் திரும்ப பெறுவதோடு 4 ஜி கட்டணத்தை விட கூடுதலாக 5 - 10 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகரிக்க வாய்ப்பு: இந்த ஆண்டின் அரையாண்டுக்கு பிறகு அதாவது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதுபோக மொபைல் சேவை கட்டணத்தையும் செல்போன் நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவிலான கட்டணத்தை வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்பி வரும் நிலையில், தற்போது 5 ஜி சேவைக்கான கட்டணம் 10 - சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications