ஒருவர் வாங்கினா போதும்.. வீட்டில் வேற யாரும் ரீசார்ஜ் பண்ணவே தேவையில்லை.. ஏர்டெல் ‘செம’ பிளான்!
சென்னை: ஒரே ஒரு எண்ணுக்கு ஒரு பிளான் ஆக்டிவேட் செய்தால் செய்தால் போதும் உங்கள் வீட்டில் இருக்கும் மொத்த நபர்களும் தனியாக ரீசார்ஜ் செய்யாமலேயே இலவசமாக பல்வேறு பலன்களைப் பெறலாம். இது என்ன எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க..
ஏர்டெல் நிறுவனம் தமது 599, 999 மற்றும் 1199 ரூபாய் போஸ்ட்பெய்டு திட்டங்களில் இலவச ஃபேமிலி ஆட்டோமேட்டிக் டேட்டா மற்றும் அழைப்புகள் வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நபர் போஸ்ட்பெய்டு பிளானை வாங்கினால், அவரது குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களுக்கும் இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் வசதி கிடைக்கும்.

ஏர்டெல் ஃபேமிலி பிளான்கள்: ஏர்டெல்லின் புதிய ஃபேமிலி பிளான்கள், குடும்பங்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குகின்றன. உதாரணமாக, ஏர்டெல் ஃபேமிலி பிளான் வைத்திருப்பவர் அந்த பிளானுக்கு வழங்கப்படும் வசதிகளை நிர்வகிக்கலாம் மற்றும் தேவைக்கேற்ப குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். கூடுதலாக, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களின் சொந்த டேட்டா ஒதுக்கீட்டைப் பெறுகிறார்கள், இதன் மூலம் அனைவரும் வேகமான மற்றும் தடையில்லா டேட்டா சேவைகளை அனுபவிக்க முடியும்.
இரண்டு பேர் கொண்ட சிறிய குடும்பமாக இருந்தாலும் அல்லது 5 பேர் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ற பலவிதமான போஸ்ட்பெய்டு ஃபேலிமி பிளான்களில் இருந்து தங்களுக்கு தோதான பிளானை தேர்வு செய்யலாம். இந்த புதிய ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன், டேட்டா ரோல் ஓவரின் பலன்களையும் நீங்கள் அனுபவிக்க முடியும். கடந்த மாதத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் மீதமுள்ள டேட்டா அடுத்த மாதத்திற்கு சேர்த்து வரவு வைக்கப்படும். இதன் விளைவாக, உங்கள் டேட்டா எப்போதும் வீணாகாது, நீங்கள் விரும்பியபடி அதை பயன்படுத்தலாம்.
பிளான் 599: இந்த திட்டத்தில் மொத்தமாக 105 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது நீங்கள் 75 ஜிபி டேட்டா + உங்கள் குடும்பத்தின் இன்னொரு நபர் 30 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். மேலும், தினசரி 100 SMS, வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். மேலும், இந்த பிளான் உடன் 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தா, 1 வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன், எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் பிளானை வாங்கினால், ஒரு நபருக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும்.
பிளான் 999: இந்த திட்டத்தில் 190 ஜிபி டேட்டா, தினசரி 100 SMS, அன்லிமிட்டெட் அழைப்புகள் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் இந்த பிளானை வாங்கினால், மூன்று நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும். பிளானை வாங்குபவர் 100 ஜிபி மற்றும் மற்ற 3 நபர்கள் தலா 30 ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம்.
பிளான் 1,199: இந்த திட்டத்தில் 240 ஜிபி டேட்டா, தினசரி 100 SMS, அன்லிமிட்டெட் அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் ஆகியவை இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் இந்த பிளானை வாங்கினால், மூன்று நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும். உங்களுக்கு 150 ஜிபி டேட்டா மற்றும், மற்ற 3 நபர்கள் தலா 30 ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம்.
பிளான் 1,499: இந்த திட்டத்தில் 320 ஜிபி டேட்டா, தினசரி 100 SMS, அன்லிமிட்டெட் அழைப்புகள் ஆகியவை கிடைக்கும். 6 மாத அமேசான் பிரைம் வீடியோ, ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் ஆகியவை இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் இந்த பிளானை வாங்கினால், 4 நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும். உங்களுக்கு 200 ஜிபி டேட்டா மற்றும், மற்ற 4 நபர்கள் தலா 30 ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம். இந்த பிளானுடன் ரூபாய் 3000 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பலன்களும் இலவசமாக கிடைக்கும்.
இந்த மாதாந்திர போஸ்ட்பெய்டு திட்டங்கள் அனைத்தும் 30 நாட்களுக்கானவை. இந்த பிளான்களை பெறுவதற்கு ஏர்டெல் இணையதளம் அல்லது ஏர்டெல் ஸ்டோர்களை அணுகலாம். இந்த பிளான்கள், மலிவான விலையில், ஒரு குடும்பமே பயன்படுத்துவதற்கு ஏர்டெல் யூசர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications