Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. புது ஆஃபருடன் ஜியோவை அணுகிய ஏர்டெல்.. இது மட்டும் நடந்தால் பல கோடி மக்களுக்கு நிம்மதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் இரு பெரும் டெலிகாம் நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ஜியோ இருக்கிறது. இரு நிறுவனங்களுக்கும் இடையே தான் போட்டியும் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ஆஃபருடன் ஜியோவை அணுகியுள்ளது. ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையில் இந்திய டெலிகாம் சந்தையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ வருவதற்கு முன்பு வரை, பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் இருந்தன. ஆனால், அதிரடியாக உள்ளே நுழைந்த ஜியோ சலுகைகளை அள்ளி வீசின. இதைச் சமாளிக்க முடியாமல் பல டெலிகாம் நிறுவனங்கள் திவால் ஆகின. மற்றொரு புறம் ஜியோவின் யூசர் பேஸ் தாறுமாறாக அதிகரித்தது.

Airtel offers Jio to have a partnership to take actions against Telecom Fraud Initiative

டெலிகாம் நிறுவனங்கள்

இப்போது நமது நாட்டில் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களும் ஒரு அரசு டெலிகாம் நிறுவனமும் தான் உள்ளன. அதில் முதலிடத்தில் ஜியோ உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே டெலிகாம் துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே திடீரென ஏர்டெல் நிறுவனம் ஜியோவை அணுகியுள்ளது.

ஜியோவை அணுகிய ஏர்டெல்

அதாவது டெலிகாம் மோசடிகள் நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பல கோடி ரூபாயை இழக்கிறார்கள். இந்த டெலிகாம் மோசடிகளுக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இணைந்து பணியாற்றலாம் என்ற ஆஃபருடன் ஜியோ நிறுவனத்தை ஏர்டெல் அணுகியுள்ளது. ஜியோ மட்டுமின்றி வோடபோன் ஐடியா (Vi) நிறுவனத்தையும் ஏர்டெல் அணுகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிடமும் ஏர்டெல் தெரிவித்துவிட்டதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், அதைச் சமாளிக்கவும் ஒருங்கிணைந்த தீர்வை காணவும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏர்டெல் வலியுறுத்தியுள்ளது.

மோசடிகளைத் தடுக்க கோரிக்கை

இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10.98 லட்சம் கோடியாக இருக்கிறது.. நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஏர்டெல் மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்தவொரு தளமாக இருந்தாலும் அங்கு மோசடி நடப்பதைத் தடுப்பதே ஏர்டெல்லின் பிரதான நோக்கமாகும்.

இது தொடர்பாக ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய இரு டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஏர்டெல் தனித்தனியாகக் கடிதங்களையும் எழுதியுள்ளது. அதில் 2024ல் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் இந்தியாவில் 17 லட்சத்திற்கும் அதிகமான சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் இதனால் மக்கள் ரூ.11,000 கோடிக்கு மேல் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஷிங், போலி கடன் ஆஃபர் என சைபர் குற்றவாளிகள் புதிய யுக்திகளைக் குற்றவாளிகள் பயன்படுத்தி வருவதால் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் இழக்கும் தொகையும் அதிகரித்தே வருகிறது.

பல கோடி பேருக்கு நல்லது

ஏர்டெல் தனது கடிதத்தில் மேலும், "அப்பாவி மக்களைக் குறிவைத்து ஃபிஷிங் மற்றும் மோசடி லிங்க் அனுப்பி பணத்தைப் பறிக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே முழு ஒத்துழைப்பு இல்லாத நிலையில், அதை மோசடி பேர்வழிகள் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை மூன்று நிறுவனங்களும் சைபர் குற்றங்களுக்கு எதிராக இணைந்து செயல்படத் தொடங்கினால் சைபர் குற்றங்கள் மிகப் பெரியளவில் குறையும். இது இந்தியாவில் உள்ள பல கோடி மக்களுக்கு நன்மை தருவதாகவே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+