ஏர்டெல் யூசர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உங்க சிபில் ஸ்கோரை செக் செய்வது ரொம்பவே ஈஸி!
சென்னை: இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது. இதில் சிபில் ஸ்கோர் செக் செய்தால் உங்கள் ஸ்கோர் குறையும் என்ற கவலையும் வேண்டாம்.
சிபில் ஸ்கோர் (CIBIL Score) என்பது கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடும் ஒரு மூன்று இலக்க எண். இது 300 முதல் 900 வரை இருக்கும். அதிக சிபில் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். 750க்கு மேல் இருந்தால் நல்ல சிபில் ஸ்கோர் எனக் கருதலாம். வங்கிகள், நிதி நிறுவனங்கள் இந்த க்ரெடிட் ஸ்கோரை கடன் வழங்குவதற்கு முன் ஒரு நபரின் கடன் தகுதியை தீர்மானிக்கும் அளவுகோலாகப் பயன்படுத்துகின்றன.

நம்பகமான சில கிரெடிட் ஸ்கோர் தளங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் மிகவும் நம்பகமான ஒன்று CIBIL. நாம் கடன் மூலம் நிதியைப் பெற முயற்சிக்கும்போது கிரெடிட் ஸ்கோர்கள் முக்கியம். கடன்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர்கள் நல்ல நிலையில் இருக்கும்போது தான் கிரெடிட் கார்டுகளும் எளிதாக நல்ல சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன.
பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க், மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க அனுமதிக்கிறது. இணையதளம் வழியாக நீங்கள் இதில் க்ரெடிட் ஸ்கோரை செக் செய்ய முடியாது. ஆப் வழியாக மட்டுமே செக் செய்யலாம். இதில் சிபில் ஸ்கோர் செக் செய்வதால் உங்கள் ஸ்கோர் குறையும் என பயப்படவும் தேவையில்லை.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்கை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் அணுகலாம். அதில், பயனர்கள் CIBIL ஸ்கோரை சரிபார்க்கலாம். நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருந்தால் ஏர்டெல்லிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பெற உதவும். ஏர்டெல் கிரெடிட் கார்டுக்காக ஆக்சிஸ் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸுடன் இணைந்து ஏர்டெல் பஜாஜ் ஃபின்சர்வ் இன்ஸ்டா EMI கார்டு என்ற கார்டும் உள்ளது.
CIBIL ஸ்கோரை மக்கள் சரிபார்க்க வேறு வழிகள் உள்ளன என்றாலும், இது ஏர்டெல் பயனர்களுக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாகும். ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் 100% டிஜிட்டல் கடன்களை செயல்படுத்துவதாகக் கூறுகிறது. உண்மையில், யூசர்கள் தங்கள் தொலைபேசி மூலமாகவே ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறக்கலாம். கணக்கில் பணத்தை வைத்திருப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வட்டி வருவாய் கிடைக்கும்.
கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக ஏர்டெல் கூறுகையில், "நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பதன் மூலம் ஏர்டெல் ஃபைனான்ஸ் மற்றும் அதன் எளிய மற்றும் பாதுகாப்பான நிதி சலுகைகளை அனுபவிக்கலாம். ஒரு நல்ல கிரெடி ஸ்கோர் ஃப்ளெக்ஸி கிரெடிட்டைப் பெறவும், ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை எளிதாகப் பெறவும் உதவும். துல்லியமான கிரெடிட் ஸ்கோரை ஏர்டெல் மூலம் சரிபார்க்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications