ஏர்டெலின் அடிதூள் திட்டம்.. வெறும் ரூ.398க்கு ஏகப்பட்ட சலுகைகள்.! கூடவே ஹாட்ஸ்டாரும் இலவசமாம்!
டெல்லி: நமது நாட்டில் ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் தக்கவைக்கப் போட்டி போட்டிக் கொண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ தனது யூசர்களை அதிகரிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஏர்டெல் இப்போது மிக மிக முக்கியமான ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அங்கே பெரும்பாலான மக்கள் இணையத்தை செல்போன் மூலமாகவே பயன்படுத்துகிறார்கள். பைஃபர் நெட் சேவை எல்லாம் வெறும் மெட்ரோ நகர் பகுதிகளில் மட்டுமே இருக்கிறது.

மற்ற ஊர்களில் எல்லாம் மொபைல் மூலமாகவே அதிகம் டேட்டா பயன்படுத்தப்படுகிறது. இதனால் டெலிகாம் நிறுவனங்களின் ஒவ்வொரு திட்டங்களும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும்.
டெலிகாம்: இப்போது நமது நாட்டில் தனியார் நிறுவனங்கள் என்றால் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவையும், அரசு நிறுவனம் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனமும் சந்தையில் உள்ளன. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதன் பிறகு யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. பலரும் மீண்டும் பிஎஸ்என்எல் பக்கமே செல்கிறார்கள்.
இதன் காரணமாக யூசர்களை தக்கவைக்கத் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் போராடி வருகின்றன. இதற்கிடையே நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இப்போது இரண்டு முக்கிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளன.
போட்டி: தற்போதை காலகட்டத்தில் ஓடிடி சந்தா முக்கியமானதாக இருக்கும் நிலையில், ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும் வகையில் ஏர்டெல் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஜியோ ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஜியோ சினிமா சந்தாவை வழங்கி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக ஏர்டெல் இந்த திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏர்டெல்: ஏர்டெல்லின் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ. 398.. இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடட் கால் பேசலாம்.. தினசரி 2ஜிபி டேட்டா நமக்குக் கிடைக்கும் சூழலில், அன்லிமிடெட் 5G சேவையும் கிடைக்கும்.. அதாவது உங்கள் செல்போனில் 5ஜி வசதி இருந்து, நீங்கள் 5ஜி சேவை கிடைக்கும் இடத்தில் இருந்தால்.. டேட்டா லிமிட் இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
இது தவிர வாடிக்கையாளர்கள் தினமும் 100 எஸ்எம்எஸும் கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதே 28 நாட்களுக்கு உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும்.
மற்றொரு திட்டம்: எனக்கு ஹாட்ஸ்டார் எல்லாம் வேண்டாம்.. அன்லிமிடட் டேட்டா போதும் என நீங்கள் சொன்னால் உங்களுக்கும் தனியாக ஒரு ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டம் ரூ.379க்கு இருக்கிறது. ஒரு மாத காலம் வேலிடிட்டி கொண்ட அதில், உங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும். இதிலும் 5ஜி இலவசம் என்பதால் 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் எந்தவொரு கட்டுப்பாடு இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்.
தற்போதைய சூழலில் சுமார் 46.37 கோடி யூசர்களுடன் ஜியோ தான் நாட்டின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 38.34 கோடி பயனாளர்களுடன் 2வது இடத்தில் இருக்கும் நிலையில், வொடாஃபோன் ஐடியாவின் 21.24 கோடி பயனாளர்களுடன் 3வது இடத்திலும், பிஎஸ்என்எல் நிறுவனம் 9.18 கோடி பயனாளர்கள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications