ஆப்பிள் ஐபோன் 16 வந்த நேரம்.. சர்ரென குறைந்த பழைய மாடல் போன்கள்.. அதுவும் இந்த மாடல் விலையை பாருங்க
சென்னை: அமேசானின் இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 29 அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேசானின் விற்பனைக்கு முன்னதாக வர உள்ள சில சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வெளியிட தொடங்கியுள்ளது.
அதன்படி ஐபோன் 13 கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது ரூ.39,999க்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 13 தற்போது பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் போர்டல்களில் சுமார் 47,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் 8 ஆயிரம் ரூபாய் குறைவாக ஐபோன் 13 விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில், ஆப்பிள் ஐபோன் 16 ரூ.79,900 முதல் தொடங்குகிறது, ஐபோன் 16 பிளஸ் விலை ரூ.89,900. உயர்தர மாடல்களான iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை முறையே ரூ.1,19,900 மற்றும் ரூ.1,44,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதே புதிய ஐபோன் மாடலை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். ஆப்பிள் புதிய மாடல்களில் கணிசமான தள்ளுபடியை பெற முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் trade-in program மூலம் ஆப்பிள் புதிய மாடல் போன்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
அதாவது ஆப்பிள் பழைய மாடல் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து.. புதிய மாடல் போன்களை வாங்க முடியும். உங்களின் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் ஐபோனின் மாடல் எப்படி இருக்கிறதோ.. அதன் மாடல் என்னவோ அதன் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் மாடலுக்கு அதிக தள்ளுபடி பெற முடியும். அதாவது ரூ..54,900 வரை ஐபோன் 16 விலை குறையும்.
ஆப்பிள் ஐபோன் 16 (128 ஜிபி) விலை ரூ.79,900. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், சிறந்த நிலையில் உள்ள பழைய iPhone 14ஐ எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ.25,000 வரை பெறலாம். இதன் மூலம் ஐபோன் 16 மாடல் விலை ரூ.54,900 ஆக குறையும்.
செப்டம்பர் 13 ஆம் தேதி ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி, செப்டம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது. இதன் விற்பனை தொடங்கும் நிலையில், புதிய சீரிஸ் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறாமல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
விற்பனை நிறுத்தம், விலை குறைவு: ஐபோன் 16 சீரிஸ் அறிவிப்புடன், ஆப்பிள் அதன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10,000 குறைத்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல்கள் 3ர்ட் பார்ட்டி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் இன்னும் கிடைக்கின்றன.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications