"லைவ் டிரான்ஸ்லேசன்" இனி மொழிப் பிரச்சனை ஓவர்.. ஆப்பிள் அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ்.. என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தரப்பில் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலையாக மட்டும் இந்திய மதிப்பில் ரூ.22 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்பாட்ஸில் லைவ் டிரான்ஸ்லேஷன் வசதி உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் 17 சீரிஸ் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஐபோன் 17 சீரிஸில் மட்டும் 4 மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது.

Apple AirPods Pro 3

அந்த வகையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ 3 முன்பு வெளியான ஏர்பாட்ஸை விடவும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் வயர்லெஸ் வசதியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர்பாட்ஸ், ANC எனப்படும் வெளியில் உள்ள சத்தத்தை கட்டுப்படுத்தி நாம் கேட்கும் இசையிலோ அல்லது வார்த்தைகளையோ துல்லியமாக காதில் ஒலிக்கும்.

இது சுமார் 8 மணி நேரம் வரை செயல்பாட்டில் இருக்கும். அதேபோல் டிரான்ஸ்பேரன்சி மோட் மூலமாக சுற்றுப்புற ஒலிகளையும் கேட்க முடியும். உதாரணமாக பைக் ஓட்டிச் செல்லும் போது, இந்த வசதி பயன்படும். அதேபோல் ஒவ்வொரு மனிதருக்கும் காதுகள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். அதனால் அத்தனை காதுகளுக்கும் பொருந்தக் கூடிய அம்சங்கள் இணைத்து அளிக்கப்படும்.

அதேபோல் உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு ஸ்பெஷலாக சில வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது 50 மோட்கள் மூலமாக நமது இதயத்துடிப்பு, எவ்வளவு கலோரிஸ் பர்ன் செய்திருக்கிறோம், நமது உடற்பயிற்சியின் வரலாறு, அதன் டேட்டாக்கள் என்று அத்தனையையும் சேகரித்து வைத்து கொள்ளும். இந்த ஏர்பாட்ஸில் முக்கிய அம்சமாக லைவ் டிரான்ஸ்லேஷன் அம்சம் இருக்கிறது.

அதாவது வேறு மொழி பேசும் ஊர்களுக்கு செல்லும் போது அவர்கள் பேசும் மொழியை மொழிபெயர்த்து நமது மொழியில் கேட்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலம், ஃபிரென்ச், ஜெர்மன், போர்ச்சுகல், ஸ்பெனிஷ் உள்ளிட்ட மொழிகளில் இயங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 4 மொழிகளை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் பேட்டரி 12 மணி வரை நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலையாக ரூ.22,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+