ஆப்பிள் வாட்சில் இனி 5G மொபைல் சேவை.. செயற்கைகோள் உதவியுடன் மெசேஜ்.. உயர் ரத்த அழுத்தத்திற்கான அலர்ட்.. விலை என்ன?
கலிஃபோர்னியா: உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன பொருட்களை பயன்படுத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இன்றைய ஆப்பிள் ஈவண்ட் 2025 நிகழ்ச்சி. கலிபோர்னியாவின் குபர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் "ஆ-டிராப்பிங்" நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தியது.
ஸ்டார்ட் வாட்ச் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் தற்போது, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE 3 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் பல அதிநவீன வசதிகள், அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, முந்தைய சீரிஸ் 10-ஐ விட மெலிதான வடிவமைப்புடன் வெளியாகியுள்ளது. இதில் புதிய Ionex கண்ணாடி டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது, இது முந்தைய மாடல்களை விட இரு மடங்கு Anti scratch resistance திறனைக் கொண்டுள்ளது. அதாவது, அவ்வளவு எளிதாக வாட்ச் கண்ணாடியில் கீறல்படாது. 42மிமீ மற்றும் 46மிமீ அளவுகளில் கிடைக்கும் இந்த வாட்ச், Wi-Fi மற்றும் செல்லுலார் மாடல்களில் வெளியாகிறது. இதில் S11 சிப் பயன்படுத்தப்பட்டு, 5G இணைப்பு மற்றும் மேம்பட்ட ஆற்றல் திறன் உடன் வெளியாகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11-இன் முக்கிய அம்சங்களில் ஒன்று, உயர் இரத்த அழுத்தம் கண்டறியும் திறன் ஆகும். இந்த அம்சம் 150 நாடுகளில் உள்ள மருத்துவ ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற வெளியாகிறது. இதன் மூலம், இந்த வாட்சை பயன்படுத்தும் மக்களுக்கு, உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை அடையாளம் காண உதவும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
மேலும், இரவுகளின் தூக்கத் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட "ஸ்லீப் ஸ்கோர்" அம்சம், தூக்க நேரம், படுக்கைக்கு செல்லும் நேரத்தின் நிலைத்தன்மை மற்றும் தூக்கம் ஏற்படாமல் உள்ள தடங்கல்களைப் பற்றிய ரிப்போர்டை வழங்குகிறது. இது கடந்த சீரிஸை விட அதிக தரவுகளை தரும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.
இந்த வாட்ச் ஜெட் பிளாக், ரோஸ் கோல்டு, ஸ்பேஸ் கிரே மற்றும் புதிய டைட்டானியம் வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 24 மணி நேரமாக உள்ளது. மேலும் வாட்ச்ஓஎஸ் 26-இல் "ஃப்ளோ" வாட்ச் முகம் உள்ளிட்ட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 வகை வெளிப்புற விளையாட்டுகளுக்கு ஏற்றது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, மேம்பட்ட LTPO 3 டிஸ்ப்ளே மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அவசர காலங்களில் ஃபோன் இல்லாமல் இணைப்பை உறுதி செய்கிறது. இது கார்மின் போன்ற போட்டியாளர்களின் செயற்கைக்கோள்-இயக்கப்பட்ட சாதனங்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கி உள்ளது. இந்த மாடலில் புதிய உடல்நல கண்காணிப்பு சென்சார்கள், Hydration ( உடலுக்கு தேவையான நீர்) மற்றும் உடல் வெப்பநிலை கண்காணிப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
அல்ட்ரா 3-இன் பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள், வெளிப்புற விளையாட்டு ஆர்வலர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தைய அல்ட்ரா மாடல்களை விட செயல்திறன் மற்றும் ஆற்றல் திறனில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதே போன்று ஆப்பிள் வாட்ச் SE 3, 2022-க்கு பிறகு முதல் புதுப்பிக்கப்பட்ட வாட்ச் ஆகும். S10 சிப் மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே உள்ளிட்ட மேம்பாடுகளுடன் வெளியாகியுள்ளது.
இந்த மாடல் ஃபிட்பிட் மற்றும் சாம்சங் போன்றவற்றுடன் போட்டியிட உதவுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11: 42மிமீ இந்திய ரூபாயில் 33 ஆயிரத்து 500 ஆகும். மற்றும் 46மிமீ மாடல் ரூ.36,000 முதல் தொடங்குகிறது. GPS + செல்லுலார் மாடலுக்கு கூடுதல் ரூ.7000 ஆயிரம் முன்பதிவு உடன் செப்டம்பர் 12 முதல் தொடங்கி, வரும் செப்டம்பர் 19 அன்று வெளியீடப்பட உள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் SE 3: இந்திய விலைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆப்பிள் வாட்ச் மூலம் நீரிழிவு நோய்க்கான Blood sugar level கண்டுபிடிக்கும் திறன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றி ஆப்பிள் பேசாதது ஏமாற்றத்தை தந்துள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications