நிறைய வசதிகள் அறிமுகம்! இன்று வெளியாகிறது Apple iOS 18 அப்டேட்! பழைய ஐபோன்களிலும் கிடைக்கும்! லிஸ்ட்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆப்பிள் 16 சீரிசை அந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அறிமுக விழாவில் ஐபோன்கள், ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் வெளியான நிலையில், ஐஓஎஸ் 18ஐ இன்று அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். ஐஓஎஸ் 18 சிறப்பம்சங்கள் என்ன? எத்தனை மணிக்கு இந்தியாவில் இந்த அப்டேட் கிடைக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஏர் பாட்ஸ், வாட்ச் உள்ளிட்டவட்டை அறிமுகப்படுத்திய ஆப்பிள், 16ஆம் தேதியான இன்று ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்ஐ அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐஓஎஸ் 18 அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. இன்று தான் அதன் அப்டேட் வெளியாகிறது. சாட் ஜிபிடி,google-ன் ஜெமினி,சாம்சங் ஏஐ உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கும் விடையளித்த ஆப்பிள், பல அட்டகாச சிறப்பம்சங்களுடன் ஐஓஎஸ்ஸை வெளியிட்டது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சிரி அசிண்டெண்டுக்கு பதிலாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் இந்த ios வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் அப்ளிகேஷன் அல்லது விட்ஜெட்டுகளை ஹோமில் நாம் சேவ் செய்து கொள்ள வைக்க முடியும். மேலும் ஐபோன் ஐகான்களையும் மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே ஐபோன் மாடல்களை வைத்திருப்பவர்களும் அப்டேட் மூலம் இந்த ஐஓஎஸ் 18ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது ஹோம் பட்டனை அழுத்தும் போது ஆப்பிள் சிரி கிராபிக்ஸ் உடன் உருவாவது போல திரையின் ஓரத்தில் ஆப்பிள் இட்டலிஜென்ஸ் புதுவித கிராபிக் உடன் ஆக்டிவேட் ஆகும். ஏற்கனவே சிரியின் குரல் இயந்திரத்தனமாக இருக்கும் நிலையில் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உயிரோடு இருக்கும் மனிதன் பேசுவது போலவே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஐஓஎஸ் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலமாக புகைப்படங்களை எப்படி வேண்டுமானாலும் நாம் உருவாக்கலாம்.
உதாரணத்திற்கு சட்டையின் கலரை சிகப்பாக மாற்ற வேண்டும், தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும், பின்னால் இருக்கும் பறவையை அகற்ற வேண்டு,ம் ஆட்டோ பிரேம் வேண்டும் என டைப் செய்தாலே அதற்கு ஏற்றார் போல படங்களை மாற்றிக் கொள்ள முடியும். இந்த நிலையில் ஏற்கனவே ஐபோன் வைத்திருப்பவர்கள் இந்த அப்டேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே ஐஓஎஸ் 18 அப்டேட்டை பெற முடியும்.
ஐபோன் 15 , ஐபோன் 15 பிளஸ் , ஐபோன் 15 ப்ரோ , ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் 14 , ஐபோன் 14 பிளஸ் , ஐபோன் 14 ப்ரோ , ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, ஐபோன் SE - 2ஆம் தலைமுறை மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் ஐஓஎஸ் 18ஐ அப்டேட் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று ஆப்பிள் ஐஓஎஸ் 18 வெளியாகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு இந்த அப்டேட் கிடைக்கும். இதே போல சீனாவின் பீஜிங்கில் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கும், பிரேசிலியாவில் இன்று மதியம் 2.30 மணிக்கு தென்னாபிரிக்காவில் இன்று இரவு 7.30 மணிக்கும், அமெரிக்காவின் சிகாகோவில் இன்று மதியம் 12:00 மணிக்கும், துபாயில் இரவு 9.39 மணிக்கு இந்த அப்டேட் கிடைக்கும்.
இந்தியாவில் இந்த அப்டேட்டை ஐபோன் பயனர்கள் இரவு 10:30 மணிக்கு பெற்றுக் கொள்ளலாம். இதே போல லண்டனில் மாலை 6:00 மணிக்கும், மெக்சிகோ சிட்டியில் காலை 11 மணிக்கும், மாஸ்கோவில் இன்று இரவு எட்டு மணிக்கும், ஆப்பிள் ஐஓஎஸ் 18 அப்டேட்டை பெற்றுக் கொள்ளலாம். டோக்கியோ உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இரவு இரண்டு மணிக்கு ஆப்பிள் ஐஓஎஸ் 18 அப்டேட் கிடைக்கும் என ஆப்பிள் ஹப் அறிவித்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications