மோசமான டிசைன்.. கொஞ்சம் கூட ஸ்ட்ராங்கா இல்லை.. ஐபோன் 15 வாங்கிய யூசர்கள்.. பெரும் அதிர்ச்சி!
சென்னை: ஐபோன் 15 போன் எதிர்பார்த்த தரத்துடன் இல்லை என்பதால் பயனாளிகள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 தொடரை கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தது. கடந்த வாரம் நடந்த "வொண்டர்லஸ்ட்" வெளியீட்டு விழாவில் இந்த போன் வெளியிட்டது. தற்போது இந்திய மார்க்கெட்டில் இது விற்பனைக்கு வருகிறது. இதன் இந்திய விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.
முதல்முறையாக உலக மார்க்கெட்டில் ஐபோன் கிடைக்கும் அதே நாளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மார்கெட்டிலும் போன்கள் கிடைத்துள்ளன. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது.

ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கான முன்பதிவு தேதிகள் மற்றும் விலை பற்றி ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 15 தொடரை ஆர்டர் செய்வது பற்றியும், இது எவ்வளவு தொகைக்கு கிடைக்கும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஐபோன் முன்பதிவு எப்போது தொடங்கும்?: இந்த போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் கடந்த செப்டம்பர் 15 தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்தது.
ஐபோன் 15 இந்தியாவில் விற்பனை தொடங்கியது: ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.
அதிர்ச்சி: இந்த நிலையில்தான் ஐபோன் 15 போன் எதிர்பார்த்த தரத்துடன் இல்லை என்பதால் பயனாளிகள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆப்பிளின் ஐபோன் 15 கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டிற்கு ஆளானது. தொழில்நுட்ப ஆர்வலர்களால் பகிரப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் பலரும் ஐபோன் 15க்கு எதிராக இருந்தன.
ட்யுரபிலிட்டி சோதனைகளில் மோசமாகச் செயல்பட்டதாகவும், சீரற்ற வண்ணம் மற்றும் வேறு சில குறைபாடுகள் இருப்பதாகவும் கூறுகின்றன. குறிப்பிட்ட உயரத்தில் இருந்து வீசிய போது ஐபோன் 14 பாதுகாப்பாக இருந்ததை போல ஐபோன் 15 இல்லை. உடனே உடைகிறது. அதேபோல் அதன் வளைந்த பகுதிகள் மிகவும் மென்மையாக வலிமையின்றி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆப்பிள் போன்களில் அடிக்கடி லேசான கோடு தோன்றுகிறது. இது மிகப்பெரிய சாப்ட்வேர் கிளிட்ச் ஆகும். அதேபோல் இதில் வண்ணம் சரியாக முடிக்கப்படவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும்.
இந்த மாடல்களில் ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications