Waiting Is Over.. வந்தாச்சு Iphone 18 Pro.. Iphone 18 Pro Max! அட்டகாச அம்சங்களுடன் களமிறங்கிய Apple

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளவில் செல்போன் உற்பத்தியில் தனிப்பெரும் ஜாம்பவானாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ, ஐ போன் 18 ப்ரோ மேக்ஸ், ஏர்பாட்ஸ் 5 மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் பல்வேறு புதிய அப்டேட்களுடன் இந்த போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. iphone 18 proவின் விலை 1,69,900 iphone 18 புரோ மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை 1,69,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apple iPhone AI

இந்த இரு மாடல்களும் 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி மற்றும் 2 டிபி சேமிப்பு திறன்கள் உடன் வெளியிடப்பட்டுள்ளது. பர்கண்டி, கிளேசியர், சில்வர்மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த iphone 18 pro சீரியஸில் கேமராவில் பல முக்கிய அப்டேட்களை ஆப்பிள் செய்திருக்கிறது.

பிரைமரி கேமராவில் ஆட்டோமேட்டிக் ஹோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் மூலம் கேமரா லென்ஸ் ஷட்டர் ஸ்பீடை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். இதனால் மிகக் குறைந்த வெளிச்சத்திலேயே புகைப்படம் எடுக்கலாம். மேலும் கேமரா அப்ளிகேஷனில் புதிய அப்டேட்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. போட்டோ மட்டும் வீடியோ எடுக்கும் போது ஷட்டர் ஸ்பீட் உள்ளிட்ட அமைப்புகளை பயனர்கள் எளிமையாக கட்டுப்படுத்த முடியும்.

ஐபோன் 18 ப்ரோ சீரிசின் முக்கிய புதிய அடையாளமாக பர்கண்டி நிறம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஃபோன்களில் இதுவரை இந்த வண்ணம் பயன்படுத்தப்படவில்லை. இந்த சீரிஸில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும், கேமரா செயல்திறன் மற்றும் ஏஐ சார்ந்த வசதிகளில் இந்த ஆப்பிள் சீரிஸ் 18 சீரிஸ் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த 18 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மற்றும் சிரி அசிஸ்டன்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் 5-ஐயும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முந்தைய ஏர்போர்ட்ஸ்களைப் போலவே வடிவமைப்பு இருந்தாலும் இரைச்சலை குறைக்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சீரிஸ் ஏர்பாட்ஸ்களை விட இந்த சீரிஸ் ஏர்பாட்ஸ்கள் 50 சதவீதம் இரைச்சலை கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. நாய்ஸ் கண்ட்ரோல் மூலம் வசதிகளுடன் ஏர்பாட்ஸ் கூடுதல் வசதிகளை வழங்கும் என்கிறது ஆப்பிள்.

அதுமட்டுமில்லாமல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, வாட்ச் அல்ட்ரா 4 மாடல்களிலும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உடல் நலம் சார்ந்த பல்வேறு அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக புதிய சென்சார்கள் மூலம் ஒவ்வொரு ஐந்து வினாடிகளுக்கும் இதயத்துடிப்பு தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் வகையில் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ்கள் உள்ளது. இதுவரை வெளியான ஆப்பிள் வாட்ச் களில் மிகவும் துல்லியமான சென்சார் கொண்டவையாக இந்த வாட்ச் சீரிஸ் இருக்கும்.

தற்போது இந்த வெளியீட்டு நிகழ்வில் ஐபோன் 18 அறிமுகப்படுத்தப்படவில்லை. தற்போது ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் மட்டுமே வந்திருக்கும் நிலையில் ஐபோன் 18 ப்ரைமரி போன் வரவில்லை. அடுத்த ஆண்டு இந்த போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+