மக்களுக்கு மத்திய அரசின் திடீர் அலர்ட்.. செல்போனில் வரும் வார்னிங் மெசேஜ்.. கவனிச்சிங்களா?
டெல்லி: கடந்த சில நாட்களில் நம்மில் பெரும்பாலானோருக்கு அலர்ட் மெசேஜ் அலறியிருக்கும். அதற்கான காரணம் என்ன.. மத்திய அரசு இந்த அலர்ட்டை எதற்காக அனுப்புகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் கிட்டதட்ட நமது ஆறாவது விரலாக இருப்பது என்னவோ மொபைல்தான். ஆபீஸ், வீடு என எங்குச் சென்றாலும் மொபைல்கள் எப்போதுமே நம்முடன் தான் இருக்கிறது. இதனால் பல நன்மைகள் இருக்கவே செய்கிறது.

மொபைல்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த லிஸ்டில் இப்போது மற்றொரு முக்கிய விஷயமும் சேர்ந்துள்ளது. அது தொடர்பாக நாம் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
அலர்ட்: கடந்த சில நாட்களில் உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கலாம். சாதாரண வாட்ஸ்அப் அல்லது நார்மல் மெசேஜ் இல்லை இவை. மாறாகப் பலத்த மொபைல் வைப்ரேஷன் உடன் Emergency Alert Extreme என்ற வாசகத்துடன் இந்த மெசேஜ் உங்களுக்கு வந்திருக்கும். இதைப் பார்த்தவுடன் பலரும் பதறிப் போய் இருப்பார்கள். ஆனால், கவலை வேண்டாம்.. இது ஏதோ உங்களுக்கு மட்டுமே வந்த மெசேஜ் இல்லை. நாடு முழுக்க பல லட்சம் பேருக்கு இந்த மெசேஜை மத்திய அரசு அனுப்புகிறது. எதற்காக எனக் கேட்கிறீர்களா.. எல்லாம் நமது பாதுகாப்பிற்குத்தான்.
அவசர காலங்களில் பொதுமக்களுக்கு எளிதாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நோட்டிபிக்கேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மொபைல்கள் எப்போதும் நம்முடன் இருப்பதால் போர், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் நேரடியாக மக்களுக்கு எச்சரிக்கும் தர இந்த புது அலர்ட் நுட்பத்தை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசு இந்த அம்சத்தைத் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது.
டெஸ்டிங்: இதற்காகவே கடந்த சில நாட்களாக நாடு முழுக்க இருக்கும் மக்களுக்கு இந்த அலர்ட் மெசேஜ் செல்கிறது. அதிலேயே மிகத் தெளிவாக இது சோதனைக்காக (SAMPLE TESTING MESSAGE) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலர்ட் மெசேஜ் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் வந்துள்ளது. சிலருக்கு உள்ளூர் மொபைல்களிலும் வந்துள்ளது. ஆண்டிராய்டு மொபைல் வைத்துள்ளவர்களுக்கே இந்த மெசேஜ் சென்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் வைத்துள்ள பெரும்பாலானோருக்கு தொழில்நுட்ப காரணங்களால் இந்த மெசேஜ் போகவில்லை.
மத்திய அரசு அனுப்பியுள்ள அந்த மெசேஜில், "மத்திய அரசு அனுப்பியுள்ள இந்த அலர்ட் மெசேஜ் சோதனை முறையில் அனுப்பப்படுகிறது. இந்த மெசேஜ்ஜால் நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. நாடு முழுக்க இது சோதனை முறையில் அனுப்பப்படுகிறது. பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் அவசரக் காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கை அனுப்புவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எப்படிப் பயன்படும்: பூகம்பம், சுனாமி, வெள்ளம், போர் உள்ளிட்ட காலங்களில் நேரடியாக மக்களுக்கு அலர்ட் அனுப்ப இந்த எமெர்ஜென்சி சிஸ்டம் பயன்படுத்தப்படும். ஒரே நேரத்தில் பல லட்சம் பேருக்கு இதன் மூலம் அலர்ட் அனுப்ப முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே மத்திய அரசு இந்த தொழில்நுட்பத்தைத் தொடர்ச்சியாகச் சோதனை செய்து வருகிறது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும் நிலையில், இது பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள்: உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற அலர்ட் மெசேஜ் முறை அமலில் இருக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் தான் அங்கே இதை வெற்றிகரமாக டெஸ்டிங் செய்தனர். இந்த தொழில்நுட்பம் மூலம் நம்மால் ஒரே நேரத்தில் பல கோடி பேருக்கு அலர்ட் அனுப்ப முடியும். குறிப்பிட்ட இடத்தில் இருப்போருக்கு மட்டும் அலர்ட் அனுப்ப வேண்டும் என்றால் அதுவும் சாத்தியமே.. உதாரணத்திற்குச் சென்னையில் வெள்ளம் என்றால் சென்னையில் இருப்போருக்கு மட்டும் அலர்ட் அனுப்பலாம்.
இதுபோல இருப்பிடத்தை அடிப்படையாக வைத்தும் மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் இந்த அலர்ட் தொழில்நுட்பம் வரும் காலங்களில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது மத்திய அரசு உங்களுக்கு அனுப்பியுள்ள மெசேஜ் டெஸ்டிங் மெசேஜ் தான் என்றாலும் கூட இதை நாம் கவனமாகக் கையாள வேண்டும்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications