Jio vs Airtel vs Vi vs BSNL: ஒரு மாத ரீசார்ஜ் பிளானில் எது பெஸ்ட்? தேர்வு செய்ய ரொம்ப ஈஸி!
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றில் எந்த 30 நாள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் மிக மலிவானது மற்றும் மிக அதிக பலன்களை கொண்டுள்ளது என தீர்மானிப்பதில் நீங்கள் குழம்பினால், இந்தக் கட்டுரை உங்கள் யோசனையை எளிதாக்கும்.
நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. யார் அன்லிமிட்டட் கால்ஸ் தொடங்கி அதிக டேட்டா, ஓடிடி சலுகைகளை வழங்குவது என போட்டி போட்டு பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

டெலிகாம் நிறுவனங்கள் போட்டி
யூசர்களை ஈர்க்க, ஒவ்வொரு நிறுவனமும் அவ்வப்போது சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நன்மைகள் நிறைந்த மலிவான திட்டங்களை வழங்கி வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இரண்டு சிம் கார்டுகளை வைத்துள்ளீர்கள் என்றால், எந்த மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யலாம்? எந்த நிறுவனம் குறைந்த விலையில் லாபகரமான ஆப்ஷன்களை வழங்குகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.335 திட்டம்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தமது கோடிக்கணக்கான பயனர்களுக்கு பல திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் ஒன்று ரூ.335 திட்டம். இந்த திட்டத்தில், 30 நாட்கள் வேலிடிட்டி. 30 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது.
டேட்டாவை பொறுத்தவரை யூசர்கள் இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதில் தினசரி இவ்வளவுதான் பயன்படுத்தலாம் என்ற லிமிட் இல்லை. மேலும், இந்த திட்டம் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் இலவச அணுகலும் கிடைக்கும். உங்கள் வீட்டில் வைஃபை இருந்தால், உங்களுக்கு மொபைலில் அதிக டேட்டா தேவையில்லை என்றால், இந்த பிளானை தேர்வு செய்யலாம்.
ஏர்டெல் ரூ.379 திட்டம்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. இந்த திட்டத்தில், யூசர்கள் அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.
இது தவிர, டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அதாவது, ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.
வோடஃபோன் ஐடியா ரூ. 379 பிளான்
வோடஃபோன் ஐடியா, அதன் யூசர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. இந்த திட்டத்தில், யூசர்கள் அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.
இது தவிர, டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுபோக, இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், மாதத்துக்கு இரண்டு முறை தலா ஜிபி டேட்டாவை Vi ஆப் மூலம் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு 62 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு , இரவு 12 மணி முதல் பகல் 12 மணி வரை இலவச டேட்டா. இது தவிர, வார நாட்களில் பயன்படுத்தாத மீதமுள்ள டேட்டாவை சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் Weekend data rollover வசதியும் உள்ளது.
BSNL ரூ.299 திட்டம்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, வெறும் 299 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை வழங்குகிறது. BSNL-இன் இந்த திட்டம் மற்ற நிறுவனங்களை விட மிகவும் மலிவானது.
பி.எஸ்.என்.எல் வழங்கும் இந்த பிளானில் யூசர்கள் அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS வசதியைப் பெறுவார்கள். இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும். அதாவது, 30 நாட்களுக்கு 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications