ஒரு நாளுக்கு வெறும் ரூ.7 செலவு.. தினசரி 3 ஜிபி டேட்டா.. சலுகைகளை அள்ளி அள்ளிக் கொடுக்கும் BSNL

Subscribe to Oneindia Tamil

சென்னை: பி.என்.எல்.எல் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் 3 மாத பிளானை வழங்குகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா என 3 மாதங்களுக்கு மொத்தமாக 252 ஜிபி அதிவேக டேட்டா வழங்கும் இந்த திட்டம் வெறும் ரூ.599க்கு கிடைக்கிறது. அதாவது சராசரியாக வெறும் 7 ரூபாய் விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவைகளை அனுபவிக்கலாம்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கத் தொடங்கியுள்ளது பிஎஸ்என்எல். நாடு முழுவதும் ஏராளமான டவர்களையும் அமைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்.

BSNL recharge mobile

போட்டி போடும் பி.எஸ்.என்.எல்

தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களை விட பிஎஸ்என்எல் வழங்கும் திட்டங்கள் அதிக பலன்களை குறைந்த விலையில் வழங்குகின்றன. கடந்தாண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறினர்.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு விலைகளில், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் 3 மாத வேலிடிட்டி கொண்ட சூப்பரான பிளான் வெறும் ரூ.599க்கு கிடைக்கிறது. தினசரி அதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ரீசார்ஜ் திட்டம் உள்ளது.

ரூ.599 ரீசார்ஜ் பிளான்

பிஎஸ்என்எல் வழங்கும் 599 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டம் பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் அழைப்புகள் மட்டுமின்றி டேட்டா, எஸ்.எம்.எஸ் பலன்களும் ஏராளமாக கிடைக்கிறது.

599 ரூபாயில் கிடைக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்கள். நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கிற்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். 84 நாள்களும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வசதி கிடைக்கிறது. மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பிளானில் தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டா இலவசமாக கிடைக்கும். மொத்தமாக 252 ஜிபி கிடைக்கும். தினசரி 3 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால் இணைய வேகம் 40kbps ஆக குறைந்துவிடும். இந்த பிளானை பெற பிஎஸ்என்எல் செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் செயலிகள் வாயிலாகவும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+