200 நாள் வேலிடிட்டி.. பிஎஸ்என்எல் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. ஏர்டெல், ஜியோ எதிலும் இப்படியொரு திட்டம் இல்லை
டெல்லி: மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே கட்டணம் அதிகமாக இருப்பதால் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நோக்கி பலரும் மாறி வரும் நிலையில், இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் யூசர்களை மேலும் ஈர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மற்ற டெலிகாம் நிறுவனங்களைப் போல இல்லாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னுமே குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

இது யூசர்களுக்கு அன்லிமிடட் கால் மற்றும் டேட்டா வசதிகளை வழங்குகிறது. இதன் காரணமாகவே ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்தும் யூசர்கள் அதிகளவில் பிஎஸ்என்எல் பக்கம் வருகிறார்கள்.
ஒரு கோடி யூசர்கள்: கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகரித்த நிலையில், இதனால் மட்டும் சுமார் 1 கோடி யூசர்களை இழக்க நேரிட்டது. தற்போது ஒப்பீட்டளவில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவது மட்டுமின்றி.. அதன் நெட்வொர்க் கவரேஜையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணையும் யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
நெட்வோர்க்கை மேம்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 50,000 புதிய 4ஜி டவர்களை அமைத்துள்ளது. அவற்றில் சுமார் 41 ஆயிரம் டவர்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், வரும் மாதங்களில் மேலும் 50,000 டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று டெலிகாம் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
200 நாட்கள்: சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ரூ. 1000 ரேஞ்சில் இரு முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் ரீசார்ஜ் பிளானில் விலை ரூ. 999 மட்டுமே. 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் கீழ் உள்நாட்டில் அன்லிமிடட்ட கால் வசதி பெறலாம். செல்போனை முதன்மையாகக் கால் செய்ய மட்டுமே பயன்படுத்துவோருக்கு இது பெரியளவில் உதவியாக இருக்கும். அதேநேரம் இணையச் சேவை பயன்படுத்த விரும்புவோருக்கு இது ஏற்ற திட்டமாக இருக்காது.
முக்கியம்: அவர்களுக்கு ரூ. 997ல் மற்றொரு பிளான் இருக்கிறது. இந்த திட்டத்தில் வழக்கம் போல அன்லிமிடட் கால் நமக்குக் கிடைத்துவிடும். அதேபோல தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களுடன் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டாவும் நமக்குக் கிடைக்கும். அதேநேரம் இதற்கான வேலிடிட்டி 160 நாட்கள் இருக்கும். அழைப்பு மற்றும் டேட்டா என்று இரண்டையும் யூஸ் செய்வோருக்கு இது ஏற்றதாக இருக்கும்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களில் இதுபோல 200 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்களில் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்திற்கே சுமார் ரூ. 980 வரை கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதே விலைக்கு கிட்டதட்ட 2.5 மடங்கு அதிக வேலிடிட்டி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications