கேசியோ அறிமுகம் செய்துள்ள ‘ரிங்’ வாட்ச்.. வெறும் 16 கிராம் தான் எடை.. என்ன ஸ்பெஷல்? விலை என்ன?
சென்னை: முன்னணி கடிகார நிறுவனமான கேசியோ, "மோதிர" வடிவில் குட்டி வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் நேரம், தேதி காட்டப்படும். அலாரம், ஸ்டாப் வாட்ச் அம்சங்களும் உள்ளன. டிசம்பரில் உலகம் முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேசியோ அறிமுகம் செய்துள்ள இந்த வாட்ச், விரலில் அணியக்கூடிய வகையில் மோதிரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ச்சுக்கும் குறைவான அளவே கொண்டது. இந்த குட்டி வாட்ச் நேரம் மற்றும் தேதியைக் காட்டும். வழக்கமான டிஜிட்டல் வாட்ச்களை போலவே அலாரம் மற்றும் ஸ்டாப் வாட்ச் ஆகியவற்றையும் இதில் பயன்படுத்தலாம். ஸ்பீக்கர் இல்லாததால் அலாரம் என்பது, டிஸ்பிளே லைட் அணைந்து ஒளிரும் வகையில் இருக்கும்.

இந்த கேசியோ மோதிர வாட்ச், நீடித்த துருப்பிடிக்காத ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை வெறும் 16 கிராம் மட்டுமே என்பதால், எளிதாக விரலில் அணிந்து கொள்ளலாம். நீர் புகாத வகையில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் ஆகவும், இரவில் ஒளிரும் விளக்குடன் கூடிய வகையிலும் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆண்டுகள் தாங்கக்கூடிய வகையில் நீடிக்கும் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதன் பிறகு தேவையென்றால் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
CRW-001-1JR என்ற மாடல் கொண்ட இந்த புதிய ரிங் வாட்ச் கேசியோவின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் தற்போது ஜப்பானில் மட்டுமே பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது அங்கு இதன் விலை 19,800 யென் (இந்திய மதிப்பில் ரூ.10,800) எனவும் டாலர் மதிப்பில் 129 எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல் உலகம் முழுவதும் இந்த வாட்ச் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த மோதிர வாட்ச்சின் விலை இந்தியாவில் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேசியோ ரிங் வாட்ச் கேலக்ஸி ரிங் போன்ற ஸ்மார்ட் வாட்ச்கள் போல இருந்தாலும், ஸ்லீப் டிராக்கிங், இதயத் துடிப்பு அளவீடு போன்றவற்றைக் கண்காணிப்பது போன்ற எந்த உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications