Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5ஜியை விட 2000 மடங்கு வேகம்! ஒரே நொடியில் 150 படம் டவுன்லோடு செய்யலாம்! சீனாவில் மிரட்டும் இணைய சேவை

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இணையம் என்பது உலகில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வரும் நிலையில், சீனாவில் அதிவேக இணையச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் வேகத்தைப் பார்த்தால் நிச்சயம் உங்கள் தலையே சுற்றிவிடும்.

நமது நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையம் என்பது காஸ்டிலியான விஷயமாக இருந்தது. தெரியாத்தனமாக யூடியூப்பை ஓபன் செய்தால் கூட பதறியடித்துக் கொண்டு மூடிவிடும் சூழலே இருந்தது. ஆனால், இப்போது தான் அந்த நிலை மாறியுள்ளது.

 China is launching the World fastest internet with 1.2 Terabit speed

இப்போது நாடு முழுக்க 4ஜி இணையச் சேவை வந்துவிட்டது. மேலும், முக்கிய நகரங்களில் 5ஜி சேவையும் வந்துவிட்டது. இந்த 5ஜி சேவையில் நமக்கு அதிகபட்சம் 500 Mbps வேகத்தில் இணையம் கிடைக்கிறது.

அதிவேக இணையம்: ஆனால், உலக நாடுகளில் இணைய வேகம் இதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு நாம் பல நாடுகளை உதாரணமாக சொல்லலாம். இதற்கிடையே நமது அண்டை நாடான சீனாவில் உலகின் அதிவேக இணையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிவேக இணையத்தில் ஒரே நொடியில் நம்மால் ஹெச்டி குவாலிட்டியில் 150 படங்களை டவுன்லோட் செய்ய முடியும். அதாவது லியோ படத்தை நீங்கள் டவுன்லோட் செய்கிறீர்கள் என்றால்.. ஒரே நொடியில் லியோ படத்தை 150 முறை டவுன்லோட் செய்யலாம்.

இது குறித்த விரிவான செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது. இங்கே இணையத்தின் வேகம் ஒரு நொடிக்கு 1.2 டெராபிட் அதாவது நொடிக்கு 12000 ஜிகாபிட் வேகத்தில் இணையச் சேவை என்ற ரேஞ்சில் இருக்கிறது. உலகின் வேறு எந்த பகுதியிலும் இந்தளவுக்கு இணைய வேகம் இருந்ததே இல்லை. ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் இந்தளவுக்கு அதிவேகம் சாத்தியமாகியுள்ளது. முதற்கட்டமாக 3,000 கிமீ தொலைவுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவில் இந்த அதிவேக இணையச் சேவை கிடைக்கிறது.

2000 மடங்கு: இந்த அதிவேக இணையம் என்பது ஒரு அதிவிரைவு ரயில் பாதையைப் போன்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வழக்கமான இணையத்தை விட இது பல மடங்கு வேகமாக இருக்கிறது. அதாவது இந்தியாவைப் பொறுத்தவரை இங்கே 5ஜி சேவையில் நம்மால் அதிகபட்சம் 500 Mbs வேகத்தில் இணையத்தைப் பெற்றிருக்கிறோம். கொல்கத்தாவில் 506.25 Mbps வேகம் கிடைத்துள்ளது. இதைப் பார்த்தே வாயைப் பிளக்க வேண்டாம்.

சீனாவில் கிடைக்கும் இணையம் இதைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். இந்த அதிவேக இணையத்தில் நம்மால் 1.2 டெராபிட் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். அதாவது இந்தியாவின் 5ஜி சேவையைக் காட்டிலும் இது 2000 மடங்கு வேகமான இருக்கும். இந்த அதிவேக இணையம் பல வகையில் நமது வாழ்க்கையை மாற்றும்.

வரும் காலத்தில் ஆட்டோமெடிக் கார் டிரைவிங் போன்ற சேவைகள் அதிகரிக்கும். இதற்கு அதிவேக தங்கு தடையில்லாத இணையச் சேவை என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். அந்த தேவையை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தான் பூர்த்தி செய்யும்.

150 படங்கள்: சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து இந்த அதிவேக இணையச் சேவையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த அதிவேக இணையச் சேவை சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகச் சீனாவின் முக்கியமான சாதனை என்ற ஹவாய் டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் வாங் லீ, இந்த அதிவேக இணையத்தின் மூலம் ஒரே நொடியில் 150 ஹெச்டி படங்களை டவுன்லோட் செய்யலாம் என குறிப்பிட்டார்.

இந்த அதிவேக இணையம் என்பது வெற்றிகரமான செயல்பாடு என்று குறிப்பிட்ட சீனப் பொறியியல் அகாடமி திட்டத் தலைவர் வூ ஜியான்பிங், இந்த சாதனை சீன ஆய்வாளர்களுக்குப் புத்துணர்வை அளித்துள்ளதாகவும் இது மேலும் வேகமான இணையச் சேவையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பைச் சீன ஆய்வாளர்களுக்குக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+