டெய்லி வெறும் 10 ரூபாய் தான்.. தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்.. இந்த பிளான் எதில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இப்போது நமது நாட்டில் ஏர்டெல் மற்றும் ஜியோ மட்டுமே முக்கியமான டெலிகாம் நிறுவனங்களாக உள்ளன. இதற்கிடையே வெறும் ரூ.10க்கு தினசரி 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடட் 5ஜி கிடைக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பிற சலுகைகள் என்ன.. இது யாருக்கு செட் ஆகும்! முக்கியமாக இந்த பிளான் எதில் இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் மொபைல் மூலமாகவே இணையச் சேவையை அணுகுகிறார்கள். என்ன தான் பைபர் நெட் சேவை அதிவேகமாக இருந்தாலும் அவை நகர்ப் பகுதிகளில் மட்டுமே இருக்கும். நகர்ப்புறங்களைத் தாண்டினால் பைஃபர் டேட்டா சர்வீஸ் பெரிதாக இருக்காது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மொபைல் டேட்டா தான் முக்கியம்! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மொபைல் டேட்டாவை தான் பயன்படுத்துகிறார்கள்.

Do you know about Airtel s Rs 10 Day Plan that give unlimited Calls 2GB Daily Data

டெலிகாம் நிறுவனங்கள்

மேலும், நமது நாட்டை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏர்டெல், ஏர்செல், வோடபோன் எனப் பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால் ஜியோவின் வருகைக்குப் பிறகு இப்போது ஜியோவுடன் சேர்ந்து ஏர்டெல், விஐ ஆகிய தனியார் நிறுவனங்களும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் மட்டுமே இருக்கிறது. அதில் குறிப்பாக ஏர்டெல், ஜியோ இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஏர்டெல்

அப்படித் தான் யூசர்களை கவர இப்போது ஏர்டெல் அட்டகாசமான திட்டத்தை வழங்குகிறது. சும்மா சும்மா மாதம் மாதம் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பவர்களுக்கு ஏற்றதாக இந்த பிளான் இருக்கும். 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரீசார்ஜ் திட்டத்தின்படி உங்களுக்குத் தினசரி 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடட் 5ஜி டேட்டா வெறும் ரூ.10க்கு கிடைக்கும்.

ஏர்டெலின் இந்த திட்டத்தை ரூ.3,599க்கு வழங்குகிறது. அதில் நமக்கு அன்லிமிடட் கால் மட்டுமின்றி தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ், நாடு முழுக்க இலவச ரோமிங் கிடைக்கும். இதில் சிறப்பம்சமே உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் உங்களுக்கு அன்லிமிடட் டேட்டாவும் கிடைக்கும். இதுதான் பலருக்கும் இந்த ரீசார்ஜை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருக்கும்.

தினசரி ரூ.10 தான்

வெறும் ரூ.3,599க்கு இந்த ஒட்டுமொத்தச் சேவைகளையும் ஒரு ஆண்டுக்கு அள்ளிக் கொடுக்கிறது ஏர்டெல்.. அதாவது சராசரியாகச் சுமார் 10 ரூபாய்க்கு நமக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவும், அன்லிமிடட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. தற்போதுள்ள ரீசார்ஜ் திட்டங்களில் இது சிறந்த திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஹாட்ஸ்டார்

அதேபோல ரூ.3,999ல் ஏர்டெல் மற்றொரு திட்டத்தை வழங்குகிறது. 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில் முந்தைய திட்டத்தை போலவே தினசரி 2 ஜிபி அதிவேக 5ஜி டேட்டா, அன்லிமிடட் 5ஜி டேட்டா, அன்லிமிடட் கால், 100 இலவச எஸ்எம்எஸ், இலவச ரோமிங் உள்ளிட்டவற்றுடன் ஹாட்ஸ்டார் மொபைல் ப்ரீமியம் ஓராண்டிற்கு இலவசமாகக் கிடைக்கும். நீங்கள் ஹாட்ஸ்டார் பயன்படுத்தும் நபராக இருந்தால் இதுவும் பயன் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+