ஆப்பிள் அதிபரே வச்சிருக்காத செல்போனா.. உலகிலேயே விலை உயர்ந்த போன் யார்கிட்ட இருக்கு தெரியுமா?
மும்பை: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி பயன்படுத்தும் செல்போனின் விலை உலகிலேயே விலை உயர்ந்தது என்கிறார்கள்.
இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவருக்கு சொந்தமாக நிறைய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவை உள்ளன. அது போல் நிறைய வைர, வைடூரிய நகைகளையும் வைத்துள்ளார்.

நீடாவும் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். 1985 ஆம் ஆண்டு முகேஷை நீடா திருமணம் செய்து கொண்டார். உலகில் மிக விலையுயர்ந்த 10 வீடுகளில் அம்பானியின் அன்டீலியாவும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே..
இந்த வீட்டை பராமரிக்க மட்டுமே முழு நேரமும் 600 பணியாளர்கள் உள்ளார்களாம். சிகாகோ நாட்டை சேர்ந்த கட்டடக் கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது. இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளன. மொத்தம் 4 லட்சம் சதுர அடியாகும். இங்கு லிப்ட்கள் மட்டுமே 11 உள்ளன. அந்த வீட்டின் உயரமே 570 அடியாகும். அத்தனை பிரம்மாண்டமான கட்டடம் அன்டீலியா ஆகும்.
நீடா அம்பானி பெரும்பாலும் விலை மதிப்புள்ள பொருட்களையே விரும்புவார். தான் பயன்படுத்தும் பொருட்களில் தனித்துவம் இருப்பதையும் அவர் விரும்புவாராம். வெளிநாட்டு பிராண்டட் பைகள், செருப்புகள், பர்ஸ்கள் என அனைத்திலும் ஆடம்பரம். இவ்வளவு ஏன் நீடா தினமும் குடிக்கும் டீயின் விலையே பல லட்ச ரூபாயாம். இதெல்லாம் சரி ஊருக்கே குறைந்த விலையில் போன் கொடுத்த அம்பானியின் மனைவி எந்த மாதிரியான போனை பயன்படுத்துகிறார் தெரியுமா.
உலகிலேயே விலை அதிகமான ஸ்மார்ட்போன்கள் என்றால் ஃபால்கன் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டயமன்ட், ஸ்டூவர்ட் ஹியூஸ் ஐபோன் 4 எஸ் எலைட் தங்கம், ஸ்டூவர்ட் ஹியூஸ் ஐபோன் 4 டயமன்ட் ரோஸ் பதிப்பு, கோல்ட் ஸ்ட்ரைக்கர் ஐபோன் 3 ஜிஎஸ் சுப்ரீம், ஐபோன் 3ஜி கிங்ஸ் பட்டன், ஃபால்கன் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டயமன்ட் ஆகியவைதான்.
அதிலும் நீடா பயன்படுத்தும் போனின் விலையை கேட்டால் கிறுகிறு என வரும். நீடா பயன்படுத்தும் போனின் மாடல் பால்கான் சூப்பர்நோவா ஐபோன்6. இது பிங்க் டயமண்ட் போன் ஆகும். இதன் விலை 48 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுமா.. மிஞ்சி போன போனின் விலை ரூ 2 முதல் 5 லட்சம் வரை வாங்கலாம். ஆனால் நீடா அம்பானியின் போன் ரூ 395 கோடியாம். உலகிலேயே விலை அதிகமான போன் இதுதானாம். இந்த போனை பலரும் வாங்க முடியாது என்கிறார்கள். இந்த போன் முழுக்க முழுக்க 24 காரட் தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு தங்கத்தால் ஆனது. இளஞ்சிகப்பு வைரக் கல் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த போனை அத்தனை எளிதில் யாராலும் உடைக்க முடியாது. அது போல் ஹேக் செய்யவும் முடியாது. அப்படியே யாராவது ஹேக் செய்ய முயற்சித்தால் போதும் உடனே நீடாவுக்கு மெசேஜ் பறந்துவிடும். இந்த போன் மாடல் 2014 இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் பிளாட்டினம் உள்ளதால் அதை உடைக்கவே முடியாதாம்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications