டேட்டா இல்லாம மலிவு விலையில் ரீசார்ஜ் செய்யணுமா? ஜியோ, ஏர்டெல், வோடபோன் வழங்கும் சூப்பர் பிளான்ஸ்!
சென்னை: டேட்டா வசதி தேவைப்படவில்லையா? ஆனாலும் மாதந்தோறும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறதா? கவலையே வேண்டாம். ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா என அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் மலிவு விலை ரீசார்ஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன.
மொபைல் போன் அதிகம் பயன்படுத்தாதவர்களும், மாதந்தோறும் குறைந்தபட்ச தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது. 28 நாட்களுக்கு ரூபாய் 249 க்கு ரீசார்ஜ் செய்தால் தான் வாய்ஸ் கால்ஸ், எஸ்.எம்.எஸ் வசதிகளை பயன்படுத்த முடியும். இதோடு தினசரி 1 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். டேட்டா தேவையில்லை என்றாலும் இந்த தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

டிராய் உத்தரவு
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜியோ, ஏர்டெல் மற்றும் ஃவோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியது. டேட்டா தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால்கள் மட்டுமே அடங்கிய திட்டத்தை கொடுக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டிருந்தது. அதோடு அதை மலிவான விலைக்கு கொடுக்கவும் உத்தரவிட்டது.
2ஜி யூசர்களுக்கு அதிக டேட்டா தேவைப்படாது. அப்படியிருக்கும் நிலையில் அவர்களால் அதிக தொகை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்த முடியவில்லை என புகார்கள் எழுந்தன. மேலும், சில மாதங்கள் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தாலும் அந்த மொபைல் எண் செயலிழந்து விடுகிறது. எனவே, பலரும் தங்களின் தொடர்பு எண்ணை இழக்க நேரிடுகிறது.
வாய்ஸ் கால் ஒன்லி பிளான்
எனவே அனைத்து நிறுவனங்களும் டேட்டா இல்லாத வாய்ஸ் ஒன்லி பிளான்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் உரிய விதத்தில் ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிடப்பட்டது.
ஆகவே, ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால்கள் மட்டுமே அடங்கிய திட்டத்தை கொடுத்தது. அதில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த ஜியோ ரூபாய் 1748 திட்டம் (Jio 1748 Plan) வெளியானது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகள் கிடைக்கின்றன. டேட்டா சலுகை கிடைக்காது.
ஜியோ பிளான்
முதலில், அன்லிமிட்டட் கால்ஸ் வசதியுடன் 3,600 எஸ்எம்எஸ்களை 365 நாட்களுக்கு ஜியோ வழங்கி வந்தது. இந்த திட்டத்தின் விலை ரூ.1,958 ஆக இருந்தது. தற்போது டிராய் தலையீட்டாலும், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்தும் ஜியோ 1,748 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் வேலிடிட்டி மட்டுமே குறைந்துள்ளது. அதாவது, 336 நாள்கள் மட்டுமே வேலிடிட்டி. ஆனால், அதே அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 3,600 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.
ஜியோ ஆப்களை பொறுத்தவரை, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, வருடம் முழுவதும் சிம் ஆக்டிவிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள் வேண்டும் என்றால், ஜியோ கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் ரொம்பவே பெஸ்ட் ஆப்ஷன்.
வோடஃபோன் ஐடியா பிளான்
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை கொண்டு வந்தன. வோடபோன் ஐடியா 1,460 ரூபாயில், 270 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்துள்ளது. இதில் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் உள்ளூர் எஸ்எம்எஸ் சேவைக்கு 1 ரூபாய் மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் சேவைக்கு 1.50 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஏர்டெல் பிளான்
ஏர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை 2 பிளான்களில் மாற்றம் செய்துள்ளது. முன்னர் 499 ரூபாயில் 84 வேலிடிட்டி உடன் வந்த வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டம் தற்போது 30 ரூபாய் குறைக்கப்பட்டு 469 ரூபாயாக மாறியுள்ளது. அதேபோல், 365 நாட்களுக்கான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டம் முன்னர் 1,959 ஆக இருந்தது. தற்போது அந்த பிளான் 110 ரூபாய் குறைக்கப்பட்டு 1,849 ஆக உள்ளது. இதில் ஒரு ஆண்டு முழுவதும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், 3600 எஸ்.எம்.எஸ் கிடைக்கும். இந்த பேக்கில் டேட்டா கிடையாது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications