சத்தமே இல்லாம.. கூகுள் பே நைசாக கட்டணம் வசூலிக்குது! பெயர் வசதிக் கட்டணமாம்! அதிர்ச்சியில் பயனர்கள்
சென்னை: பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே யுபிஐ செயலியில் சத்தமே இல்லாமல் மக்களிடம் வசதிக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அது எப்படி தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பல விசயங்கள் எளிமையாகிவிட்டன. கையில் வைத்திருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் மூலமாகவே அலைச்சல் இன்றி சில நொடிகளிலேயே இருக்கும் இடத்தில் இருந்தே பல வேலைகளை மக்கள் முடித்து விடுகிறார்கள். குறிப்பாக கையில் பணத்தை எடுத்து செல்லாமல், ஏடிஎம் மையங்களில் வரிசையில் நிற்காமல் வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பி விடுகிறோம்.

அதே நேரம் இந்த யுபிஐ வசதி காலையும் வாறிவிடுகிறது. இதை நம்பி பணத்தை கொண்டு செல்லாமல், இணையதள இணைப்பு, செல்போன் சிக்னல் இன்றி கடைசி நேரத்தில் மாட்டிக்கொள்ளும் பிரச்சனைகளும் நடக்கிறது. இந்த நிலையில், யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் பகிரப்பட்டு வந்தன. ஆனால், அவை வதந்தி என்று பின்னர் உறுதிபடுத்தப்பட்டன.
இந்த நிலையில்தான், கூகுள் பே நிறுவனம் சத்தமே இல்லாமல் பயனர்களிடம் சேவைக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. கூகுள் பே பயன்படுத்தும் ஒருவர் தினசரி ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அதன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிறார். இப்படி இருக்க கூகுள் பே வெளியிட்ட புதிய சேவை விதிமுறைகளில் கட்டண வசூல் பற்றி குறிப்பிட்டு உள்ளது. ஆனால், பயனர்கள் பெரும்பாலானோருக்கு இந்த விசயம் சென்றடையவில்லை.
இந்த நிலையில்தான், கூகுள் பே நிறுவனம் சத்தமே இல்லாமல் பயனர்களிடம் சேவைக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. கூகுள் பே பயன்படுத்தும் ஒருவர் தினசரி ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அதன் மூலம் பணம் பரிவர்த்தை செய்கிறார். இப்படி இருக்க கூகுள் பே வெளியிட்ட புதிய சேவை விதிமுறைகளில் கட்டண வசூல் பற்றி குறிப்பிட்டு உள்ளது. ஆனால், பயனர்கள் பெரும்பாலானோருக்கு இந்த விசயம் சென்றடையவில்லை.
புதிய விதிகளின் படி ரூ.100 க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால், ரூ.101 முதல் 200 வரை ரீசார்ஜுக்கு ரூ.1 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.201 முதல் 300 வரை ரீசார்ஜுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு Convenience Fees, அதாவது வசதி கட்டணம் என்று பெயரிட்டு உள்ளது கூகுள் பே. டிஜிட்டல் இந்தியாவில் இன்றிமையாத சேவையாக யுபிஐ மாறிவிட்ட நிலையில் இந்த வசதிக் கட்டணம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications