கூகுளின் குவாண்டம் சிப்! சாதாரண கணினி பல கோடி ஆண்டுகள் எடுக்கும் கணக்கை கூட 5 நிமிடத்தில் தீர்க்கும்
வாஷிங்டன்: தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருக்கும் கூகுள் நிறுவனம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இப்போது மிக முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் வில்லோ என்ற குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான கம்ப்யூட்டர்கள் பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்கைக் கூட இந்த சிப் மூலம் 5 நிமிடங்களில் செய்து முடிக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் டெக் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. டெக் துறையில் நடக்கும் புதிய கண்டுபிடிப்புகள் ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போடுவதாக இருக்கிறது.

சமீப காலங்களாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்திருந்த சாட்ஜிபிடி தான் முன்னணியில் இருக்கிறது.
கூகுள் சிப்: வழக்கமாகத் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம் ஏஐ துறையில் சற்று சறுக்கிவிட்டது என்பதே உண்மை. இதற்கிடையே விட்ட இடத்தை பிடிக்கக் கூகுள் அட்டகாசமாக ரெடியாகியுள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் கூகுள் நிறுவனம் இப்போது மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இதற்காக அவர்கள் வில்லோ என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்..
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் ஆய்வகத்தில் இந்த புதிய சிப் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சிக்கலான கணக்குகளையும் கூட இந்த சிப் மூலம் வெறும் ஐந்து நிமிடங்களில் தீர்க்க முடியுமாம். அதாவது வழக்கமான கம்ப்யூட்டர் பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்குகளைக் கூட இது 5 நிமிடங்களில் முடித்துவிடுமாம்.
வெறும் 5 நிமிடம்: இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒரு சிக்கலான கணக்கை வில்லோ ஐந்து நிமிடங்களில் செய்து காட்டியது. இப்போது இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் கூட இந்த கணக்குகளை முடிக்க 10 செப்டில்லியன் (அதாவது 1025) ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். இது நமது பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வயதை விட அதிகமாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இருக்கும் கம்ப்யூட்டிங் அமைப்புகளைத் தாண்டி அதிவேகமான கம்ப்யூட்டிங் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூகுள் இப்போது முதல்முறையாக அப்படியொரு சிப்பை உருவாக்கி இருக்கிறது. வரும் காலத்தில் இது மருத்துவம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பெரியளவில் நமக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவாண்டம் சிப் என்றால் என்ன: சரி அதென்ன குவாண்டம் சிப் என நீங்கள் கேட்கலாம்.. குவாண்டம் சிப் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிப் ஆகும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான கணினிகள் "பிட்கள்" (0 அல்லது 1) மூலம் இயங்கும். அதாவது ஒரு நேரத்தில் 0 அல்லது 1 என இரண்டில் எதாவது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.
ஆனால், குவாண்டம் சிப்கள் "குபிட்கள்" மூலம் இயங்கும். அதாவது 0, 1 என இரண்டுமாக ஒரே நேரத்தில் இந்த குபிட்களால் இயங்க முடியும். இதன் காரணமாகவே சிக்கலான கணக்குகளைக் கூட வேகமாகப் போட முடியும். வில்லோ சிப்பில் 105 குபிட்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரே சிக்கல்: வழக்கமான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் பிட்களை காட்டிலும் குபிட்கள் இயல்பாகவே வேகமானவை..ஆனால், அதில் பிழை (error) ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம். இந்த பிழைகள் குபிட்களின் வேகத்தை அதிகரிப்பதில் தடையாக இருக்கிறது. ஏனென்றால் குபிட்களை அதிகரிக்கும் போது இந்த பிழைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications