ஹேக்கிங் ஆபத்து.. பணம் மொத்தமாக போயிடும்.! உங்க செல்போனில் உடனே "இதை" பண்ணுங்க! மத்திய அரசு வார்னிங்
டெல்லி: இந்தக் காலத்தில் செல்போன் என்பது ரொம்பவே அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. நமது எல்லா டேட்டாவும் செல்போனிலேயே இருந்துவிடுகிறது. இதனால் சைபர் குற்றவாளிகள் செல்போன்களை ஹேக் செய்யத் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இதற்கிடையே ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மத்திய அரசின் இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நவீனக் காலத்தில் A டூ Z வரை எல்லாவற்றுக்கும் செல்போன் பிரதான பங்கு வகிக்கிறது. ஒருவரது செல்போனை வைத்தே அவரை பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லிவிட முடியும்.

இதன் காரணமாகவே செல்போன்களை ஹேக் செய்ய சைபர் குற்றவாளிகள் முயன்று வருகிறார்கள். செல்போனை ஹேக் செய்தாலே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மொத்தமாக எடுத்துவிடலாம் என்பதே இதற்குக் காரணமாகும்.
ஆண்ட்ராய்டு செல்போன்:
இதற்கிடையே ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்போருக்கு மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டின் பல வெர்ஷன்களில் பிரச்சினைகள் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய கம்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 சிம் செல்போன் இருக்கு.. ஆனா 3 சிம் மொபைல் மட்டும் இல்லையே ஏன்! ஆச்சரியம் தரும் பதில்
ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப் பிறகு வந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை வைத்திருப்போருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிப்புகளில் பல ஆபத்துகள் இருப்பதால் எளிதாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஃப்ரேம்ஒர்க் குறைபாடு அல்லது சிப்செட்டில் தவறுகள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பல பிரச்சினைகள்:
அதில் மேலும் கூறுகையில், "ஆண்ட்ராய்டில் பல பாதிப்புகள் பிரச்சினைகள் உள்ளன. இதை வைத்து சைபர் குற்றவாளிகளால் எளிதாக முக்கிய தகவல்களைப் பெற முடியும். தகவல் திருட்டு மட்டுமின்றி சாதனங்கள் மொத்தமாக முடக்கப்படும் அபாயமும் இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. இது கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆண்ட்ராய்டு 12, ஆண்ட்ராய்டு 13, ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஆண்ட்ராய்டு 15 யூசர்கள் தேவையான அப்டேட்களை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக செல்போன் நிறுவனங்களே இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டறிந்து, அதைச் சரி செய்ய அப்டேட்களை வழங்கும். எனவே, இதுபோன்ற அப்டேட்டகளை சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அப்டேட் முக்கியம்:
எனவே, பொதுவாகவே உங்கள் செல்போனுக்கு எதாவது அப்டேட் வந்தால் அதை உடனுக்கு உடன் அப்டேட் செய்து கொள்ளவும். அடையாளம் தெரியாத நம்பர்களில் இருந்து எதாவது லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம். உங்களுக்குப் பல கோடி ஜாக்பாட் விழுந்து இருக்கிறது எனக் கூட சொல்லி மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால், அதை நம்பி லிங்கிற்குள் செல்ல வேண்டாம்.
அதேபோல செயலிகளை டவுன்லோட் செய்யும் போது, ப்ளேஸ்டோர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். சந்தேகத்திற்கு இடமான இணையதளத்தில் இருந்து எந்தவொரு செயலிகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். அது ஆபத்தைத் தருவதாக இருக்கும். எனவே முடிந்தவரை அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
பாஸ்வோர்ட்:
மேலும், எந்தவொரு தளத்திற்கும் லாகின் செய்ய பாஸ்வோர்ட் வைக்கும் போது எளிமையான பாஸ்வோர்ட் வைக்க வேண்டாம். கடினமான பாஸ்வோர்ட்டை வைக்கவும். இதுபோன்ற அடிப்படை விஷயங்களைச் செய்தாலே போதும் செல்போன் ஹேக்கிங்கில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications