3 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் களமிறங்கிய ஹானர் மொபைல்! 200 மெகாபிக்சல் கேமரா + செம மேட்டர்கள்!
சென்னை: இந்தியாவில் ஹானர் மொபைல் புதியதாக விற்பனைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய வரும் 18ம் தேதி புதிய மாடல் ஒன்றை ஹானர் வெளியிடுகிறது.
மொபைல் தயாரிப்புகளில் ஹானருக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. அதனுடைய தயாரிப்பு குறிப்பிட்ட சில முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருப்பதுதான் ஹானரின் தனிச்சிறப்பு. இருப்பினும் 65 கோடிக்கும் அதிகமான ஆன்டிராய்டு மொபைல் பயன்பாட்டாளர்கள் உள்ள இந்திய சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹானர் எந்த மொபைல்களையும் விற்பனை செய்யவில்லை.

இது ஹானர் பயனாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'ஹானர் 90' எனும் புதிய மாடல் மொபைலுடன் இந்திய சந்தையில் இறங்குகிறது ஹானர் நிறுவனம். தற்போது வரும் செல்போன்கள் அனைத்தும் 100 MP கேமரா, 200 MP கேமரா என்பது சாதாரணமாகிவிட்டது. கேமராவை பொறுத்த அளவில் ஏறத்தாழ அனைத்து ஆன்டிராய்டு மொபைல்களும் சமமான அளவில்தான் இருக்கின்றன.
எனவே ஹானர் 90 மொபைலில் உள்ள 200MP கேமரா பெரிய விஷயமாக தெரியாது. அதேபோல செல்ஃபிக்கு 50 MP கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மற்ற நிறுவனத்தில் மொபைல்களுக்கும் ஹானர் மொபைல் கேமராவுக்கும் இடையேயான வித்தியாசம் மிக அதிகம். ஹானர் மொபலை பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே அந்த வித்தியாசம் தெரியும்.
மற்றொரு புறம் ஹானர் மொபைலை வேறுபடுத்தி காட்டும் ஒரு விஷயம் என்னவெனில் அது டிஸ்பிளேதான். ஒவ்வொரு மொபைலுக்கும் டிஸ்பிளே மிக முக்கியம். அந்த வகையில், புற சூழலுக்கு ஏற்ப டிஸ்பிளே ஒளியை கட்டுப்படுத்தும் ஃப்ளிக்கர் இல்லாத 3840Hz PWM 6.7-இன்ச் 1.5K குவாட்-வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை 'ஹானர் 90' கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 2664x1200 பிக்சல்களின் உயர் தெளிவுத்திறனை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது.
இந்த மொபைல் இரண்டு வேரியன்ட்களில் வெளியாகிறது. ஒன்று 8GB RAM 256GB ஸ்டோரேஜ் மற்றொன்று 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ். இந்த இரண்டு வகை மொபைல்களும் எமரால்டு கிரீன், டயமண்ட் சில்வர் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய கலர்களில் வரும் 18ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 161.9மிமீ நீளம், 74.1மிமீ அகலம் மற்றும் 7.8மிமீ மெலிதான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக எளிதாக பயன்படுத்த முடியும்.
அதேபோல எல்லா மொபைல் பயன்பாட்டாளர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் மொபைல் பேட்டரியின் திறன்தான். பல மொபைல்களில் வசதிகள் சூப்பராக இருக்கும். ஆனால் பேட்டரி திறன் குறைவாக இருப்பதால் சார்ஜ் நீண்ட நேரம் நிற்காது. இந்த பிரச்னை ஹானர் 90 மொபைலில் இருக்கக்கூடாது என்பதற்காக இதில் 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது 65W சூப்பர்சார்ஜ் வசதியையும் கொடுத்திருக்கிறது. இதனால் எப்போது சார்ஜ் போய்விடுமோ என்கிற அச்சம் தேவையற்றது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 7 Gen 1 Accelerated Edition மூலம் இயக்கப்படுகிறது, இதில் Cortex-A710 மற்றும் Cortex-A510 கோர்களின் கலவையுடன் ஆக்டா-கோர் CPU உள்ளது. இதனால் வீடியோ கேம்களை தட்டி தூக்கலாம். மேலும் 5ஜி வசதி இருப்பதால் இன்டர்நெட் கனெக்ஷன் பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை.
8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடல் ரூ.27,999க்கும், அதே 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ.29,999க்கும் விற்பனை செய்ய ஹானர் திட்டமிட்டுள்ளது. விற்பனை சரியாக வரும் 18ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஹானர் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications