ஜனநாயகன் ரிலீஸ்.. என்ன இப்படி கண்ணீர் வருது.. ஓபனிங் காட்சியில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டிருந்த போது அமைச்சர் பர்வேஸ் கண்ணீர்விட்ட வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. பர்வேஸ் திடீரென தேம்பி தேம்பி அழுக தொடங்கினார். ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கர்சீப் மூலமாக, அந்த கண்ணீரை துடைத்தார். இதனால் அவருக்கு அருகில் இருந்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று ரிலீஸாகி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 950 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Jana Nayagan Minister Parvez Vijay

ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டிய திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது வெளியாகி இருக்கிறது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது. ஆனால் அதுவும் தவெகவின் அரசியலுக்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் ஜனநாயகன் ரிலீஸாகி இருக்கும் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களும் முதல் ஷோவை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்தார். ஜனநாயகன் படம் தொடங்கி விஜய் அறிமுகக் காட்சி வரும் போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் ஆனந்த் கண்ணீரையே கட்டுப்படுத்த முடியவில்லை.

Jana Nayagan Minister Parvez Vijay

இதனால் அருகில் இருந்த அவரின் உதவியாளர் கூட அதிர்ச்சி அடைந்தார். விஜய்யின் கடைசி படம் என்பதால், அதனை பார்த்த போது தேம்பி தேம்பி அழுததாக தெரிகிறது. அதேபோல் தேமி தேமி அழுக கூடிய வகையில் அப்படி என்ன காட்சி இருந்தது என்பதும் அந்த வீடியோவை பார்த்தவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Jana Nayagan Minister Parvez Vijay

கடைசியாக முதல்வராவதற்கு முன் எம்ஜிஆர் நடித்த மீனவ நண்பன் திரைப்படம், அவர் முதல்வரான பின் வெளியாகியது. தற்போது எம்ஜிஆருக்கு பின் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் முதல்வரான பின் வெளியாகி இருக்கிறது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+