ஐபோன்களில் மறைந்திருக்கும் இந்த விஷயம் தெரியுமா.. அதுவும் டிஸ்ப்ளேவுக்கு கீழாம்.. இது தெரியாம போச்சே
வாஷிங்டன்: நீங்கள் பயன்படுத்தும் ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் கண்ணுக்கே தெரியாத ஒரு விஷயத்தையும் சேர்த்தே அனுப்புகிறதாம். இது என்ன.. இதனால் என்ன பயன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகில் எப்போதும் மவுசு அதிகம். மற்ற மொபைல்களை காட்டிலும் விலை பல மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட, பொதுமக்கள் தொடர்ந்து ஐபோன்களை வாங்க இதுவே காரணமாகும்.

இந்தாண்டு ஐபோன் 15 விலை ரூ.79,900இல் இருந்து ஆரம்பிக்கிறது. அதிலும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ 1.60 லட்சமாக இருக்கிறது. இந்தளவுக்கு ரேட் அதிகமாக இருந்தாலும் கூட ஐபோன்களுக்கு ஆட்ரட்கள் குவிந்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம்: இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ஒரு விஷயத்தை வைத்தே அனுப்புகிறது. நீங்கள் ஐபோன் 12, 13, 15 என எந்த சீரியஸ் மொபைலை பயன்படுத்தினாலும் நிச்சயம் அதில் இது இருக்கும். இதன் மூலம் அவர்களுக்குப் பல பில்லியன் டாலர்கள் சேகரிக்க முடிகிறதாம். 2020க்கு பிறகு வெளியாகும் அனைத்து மொபைல்களில் இது நிச்சயம் இருக்கும். அப்படி ஐபோன்களில் என்ன தான் இருக்கிறது என்கிறார்களா.. வாங்க இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2020 முதல் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களில் மிக நுண்ணிய க்யூஆர் கோட்களை வைத்து அனுப்புகின்றனர். இது பொதுவாக ஐபோன்களின் டிஸ்ப்ளேவுக்கு கீழ் இருக்குமாம். இவை கண்களுக்குத் தெரியாத வகையில் மிகவும் நுணுக்கமாக இருப்பதால் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்துத் தெரிவதில்லை. ஐபோன்களில் எதாவது பிரச்சினை என்று அதை ஓபன் செய்யும் போது இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
எதற்காக இந்த க்யூஆர் கோட்: அந்த குறிப்பிட்ட டிஸ்ப்ளே எங்கே தயாரிக்கப்பட்டது.. எந்த கம்பெனி பொறுப்பு உள்ளிட்ட தகவல்களை நாம் அதில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த பார்கோடுகள் ஐபோன் டிஸ்ப்ளே உற்பத்தி செய்யும் போது பல்வேறு கட்டங்களில் அச்சிடப்படுகிறது.
மற்ற நிறுவனங்களைப் போல ஆப்பிள் தானே தனது மொபைல்களை அசெம்பிள் செய்வதில்லை. ஐபோன்களை தயாரிக்க ஃபாக்ஸ்கான் போன்ற மற்ற நிறுவனங்களுடன் ஆப்பிள் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி ஐபோன்களுக்கான டிஸ்ப்ளே லென்ஸ் டெக்னாலஜி மற்றும் பைல் கிரிஸ்டல் என இரு வேறு நிறுவனங்களிடம் இருந்து தான் பெறப்படுகிறது.
தர மதிப்பீடு: இதனால் தர மதிப்பீடு என்பது அத்தியாவசியமான ஒன்றாகிறது. எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறியவே ஆப்பிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த க்யூஆர் கோட் ஒரு மணல் துகள் அளவுக்கு மட்டுமே இருக்குமாம். இதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. சிறப்பு உபகரணங்களை வைத்து மட்டுமே பார்க்க முடியும். 2020க்கு முன்பு எந்த நிறுவனம் தரும் டிஸ்ப்ளேவில் பிரச்சினை என்பதைக் கண்டறிவதில் சிரமமாக இருந்தது.
இரு நிறுவனங்களும் இது குறித்த டேட்டாக்களை பகிரவும் ரெடியாக இல்லையாம். இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆப்பிள் நிறுவனமே கடந்த 2020இல் இந்த இரு நிறுவனங்களுக்கும் நிதி அளித்து இந்த மிகச் சிறிய க்யூஆர் கோட்களை அச்சிட்டுள்ளனர். முதல் ஐபோன் 12 மாடல்களில் முன் ஸ்பீக்கருக்கு மேலே இந்த க்யூஆர் கோட் இருக்கும். அதேநேரம் இப்போது புதிதாக வரும் மாடல்களில் திரையின் கீழ் விளிம்பில் உள்ள இடத்தில் லேசர் குறியீடு மூலம் இந்த க்யூஆர் கோட் பொறிக்கப்படுகிறது.
கை மேல் பலன்: இந்த முறையைக் கையில் எடுத்த பிறகு அவர்களுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. அதாவது முன்பு 10 ஐபோன்களில் 3இல் குறைபாடு இருக்குமாம். ஆனால், இப்போது 10இல் ஒன்றில் மட்டுமே சிக்கல் இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டாலர் சேமிக்க முடிகிறதாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications