கேமரா எல்லாம் வேண்டாம், செல்போன் போதும்.! தீபாவளி நாளில் கலக்கல் போட்டோ எடுக்கலாம்.. இது ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க நாளைய தினம் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், இந்த அழகான தீபாவளியை கச்சிதமாகப் படம் பிடிக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

தீபாவளி வந்தாச்சு.. நாம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட வேண்டிய முக்கியமான பண்டிகை தான் தீபாவளி.. பட்டாசுகள், தீபங்கள் என்று ஒளியின் விழாவாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

How To Capture Beautiful Images With Your Smartphone on Diwali 2023

இந்த அருமையான தீபாவளி குறித்து இனிமையான நினைவுகளை உருவாக்குவதில் போட்டோக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் போட்டோக்களில் சிக்கல் இல்லை. ஆனால், அதை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

டிப்ஸ்: ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி டிஎஸ்எல்ஆர் கேமராவாக இருந்தாலும் சரி, போட்டோ எடுக்கும் போது ஃபோகஸ் (Focus) முக்கியமானது. எனவே, நீங்கள் எதைப் போட்டோ எடுக்க வேண்டுமோ.. அதை ஃபோகஸ் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், overall exposureஐ செக் செய்து கொள்ளுங்கள். இது போட்டோ எடுக்கும் போது சப்ஜெக்டை விட பிரகாசமான பின்னணி இருப்பதை உறுதி செய்யும். இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல டைனமிக் ரேஞ் இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல அல்ட்ராவைட் லென்ஸை அதிகம் நம்ப வேண்டாம்.. ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அல்ட்ராவைடு கேமராக்களின் தரம் மேம்பட்டிருந்தாலும், அதில் டிஎஸ்எல்ஆர் குவாலிட்டியை எதிர்பார்க்க முடியாது. எனவே, இரவில் அல்ட்ராவைடு லென்ஸை நம்பி இருக்க வேண்டாம். ஸ்மார்ட் போனில் இருக்கும் பிரதான கேமராவையே பயன்படுத்துங்கள். அதுதான் உங்களுக்கு பெஸ்ட் போட்டோவை தரும். மேலும், அல்ட்ராவைடு கேமராவை பயன்படுத்தும் போது ஓரங்கள் குவிந்துள்ளது போல இருக்கும். எனவே, அல்ட்ராவைடு கேமராவை தவிர்க்கவும்.

முக்கியம்: போர்ட்ரெய்ட் (Portrait) போட்டோ முறையைப் பயன்படுத்துங்கள் போர்ட்ரெய்ட் போட்டோக்கள் இப்போது ஸ்மார்ட் போன்களில் நல்ல தரத்தில் வருகிறது. எனவே, அதைப் பயன்படுத்துங்கள். யதார்த்தமான பொக்கே தொடங்கிப் பல வசதிகள் இருக்கிறது. அதிலும் விலையுர்ந்த ஸ்மார்ட்போன்களில் போர்ட்ரெய்ட் போட்டோக்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே, யோசிக்கவே வேண்டாம். நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.

How To Capture Beautiful Images With Your Smartphone on Diwali 2023

அடுத்து முக்கியமானது போட்டோ ப்ரோம். rule of thirds முறையாக வைக்க வேண்டும். மேலும், lighting, போசிஷனிங் என அனைத்தையும் செக் செய்து கொல்ளுங்கள். போட்டோ என்பது அந்த நொடியில் நடக்கும் விஷயத்தை நாம் பதிவு செய்யும் முறையாகும். எனவே, அடிப்படை விஷயங்கள் சரியாக இருப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், மொபைல்களில் கேமராவை பயன்படுத்தும் போது, அதன் சார்ஜ் பயங்கர வேகமாகக் குறையும். எனவே, சார்ஜ் பேக்அப் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பாதியிலேயே மொபைல் சார்ஜ் காலியாகும். பிறகு போட்டோவே எடுக்க முடியாமல் போகும். இதையெல்லாம் முறையாக கடைப்பிடித்தால் உங்களால் இந்த அழகான தீபாவளியை கச்சிதமாகப் படம் பிடிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+