Jio: ரூ.35,100 மதிப்பிலான கிப்ட்.. அள்ளி தரும் ஜியோ.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸ்! அடடே இது தெரியாம போச்சே!
மும்பை: ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் அறிவிப்புகளுக்கு இந்திய டெலிகாம் சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. 2016ல் டேட்டா புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானி, இப்போது ஏஐ புரட்சியைத் தொடங்கியிருக்கிறார். கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்து ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள "AI Cloud Welcome Offer" குறித்து நாம் பார்க்கலாம். இதன் மூலம் சுமார் ₹35,100 மதிப்புள்ள ஏஐ டூலை இலவசமாகப் பெறலாம்.
இந்தக் காலத்தில் ஏஐ என்பது தான் பல விஷயங்களை மொத்தமாகப் புரட்டிப் போட்டு வருகிறது. அதேநேரம் ஏஐ என்பது இப்போது அனைவரும் அணுகும் வகையில் இல்லை என்பது சிக்கல் தான். ஆனால், இதை மாற்றும் வகையில் AI for All என்பதன் கீழ் ஜியோ இந்த அட்டகாசமான ஆஃபரை அறிவித்துள்ளது. இதன் மூலம் நமக்குக் கூகுளின் பிரீமியம் சேவையான கூகுள் ப்ரோ 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது ஜியோ.

கூகுள் ஏஐ
இந்த ப்ரீமியம் சேவையை நாம் தனியாக எடுக்க வேண்டும் என்றால் மாதம் ₹1,950 செலுத்த வேண்டும். ஆனால், அதை தான் 1.5 ஆண்டுகளுக்கு இலவசமாகத் தருகிறார்கள். இது சாதாரண விஷயமல்ல. இந்த இலவச ஆஃபரில் வெறும் சாட்பாட் மட்டும் இல்லாமல்.. ஒரு முழுமையான டிஜிட்டல் ஸ்டூடியோவே நமக்குக் கிடைக்கும். வேறு என்னவெல்லாம் கிடைக்கும்:
கோடிங், ரிசர்ச் மற்றும் கிரியேட்டிவ் வேலைகளுக்கான கூகுளின் சக்திவாய்ந்த ஏஐ மாடல்.
உங்கள் போன் மெமரி ஃபுல்லாகிவிட்டதா? 4K வீடியோக்கள் முதல் ஆயிரக்கணக்கான போட்டோக்கள் வரை சேமிக்க 5 டிபி மெமரி.
சினிமாத்தனமான ஏஐ வீடியோக்களை உருவாக்க Veo மற்றும் அட்வான்ஸ்டு ஏஐ இமேஜ் எடிட்டிங்கிற்கு Nano Banana 2.
உங்கள் ஜிமெயில் மற்றும் கூகுள் டாக்ஸ் உள்ளேயே ஏஐ உதவியுடன் மின்னஞ்சல் எழுதலாம் அல்லது நீண்ட கட்டுரைகளைச் சுருக்கலாம்.
கிளைம் செய்வது எப்படி?
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த ஆஃபரை 'கிளைம்' செய்வது எப்படி?
நீங்கள் ₹349 அல்லது அதற்கு மேற்பட்ட ஜியோ 5ஜி பிளானில் இருந்தால், இந்த ஆஃபரை ஈஸியாகப் பெறலாம்:
MyJio செயலியை ஓபன் செய்யுங்கள்.. அதை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
ஆப்பின் ஹோம் ஸ்கிரீனில் "Google Gemini FREE" அல்லது "Jio AI Cloud Welcome Offer" என்ற பேனரைக் கிளிக் செய்யவும். அப்படி எதுவும் தோன்றவில்லை என்றால் அங்குள்ள சேர்ச் பாரில் ஜெமினின ஆஃபர் என தேடவும்.
உங்கள் ரீச்சார்ஜ் பிளான் (₹349, ₹500 அல்லது ₹3,599 ஆண்டு பிளான்) தகுதியானதா என்பதை ஆப் தானாகவே சரிபார்க்கும்.
பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை லிங்க் செய்யவும்.
பிறகு "Claim Now" பட்டனைத் தட்டினால் போதும்! 18 மாதங்களுக்கான பிரீமியம் சந்தா உங்கள் அக்கவுண்ட்டில் ஆக்டிவேட் ஆகிவிடும்.
18 மாதங்கள்
நீங்கள் தொடர்ந்து இந்த அன்லிமிடட் பிளானை ரீச்சார்ஜ் செய்தாலே போதும். அடுத்த 18 மாதங்களுக்கு இந்த ஏஐ ப்ரீமியம் சேவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்! டேட்டா விலையைக் குறைத்து இந்தியாவை டிஜிட்டல் பாதைக்குத் திருப்பிய ஜியோ, இப்போது AIஇலும் கை வைத்து இருக்கிறது. ₹35,100 மதிப்புள்ள இந்த ஆஃபர் இளைஞர்கள் பலருக்கும் மிகப் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications