இலவசமாக Amazon Prime மெம்பர்ஷிப்.. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை இன்ஸ்டால் பண்ணுனா போதும்.. செம ஆஃபர்!
சென்னை: ஏர்டெல் வாடிக்கையாளர்கள், 'ஏர்டெல் தேங்க்ஸ்' ஆப் மூலம் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பெறலாம். எப்படி இதனை பெறுவது? வாங்க பார்க்கலாம்!
ஏர்டெல் நிறுவனம் தமது சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சைலண்டாக ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். ஓடிடி தளங்கள் மீது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதை உணர்ந்து ஏர்டெல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், அதன் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) ஆப் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் யூசர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலமாக இப்போது ஒரு வருட இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பெறலாம்.
இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். போஸ்ட்பெய்டு யூசர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்தால், ப்ரீபெய்டு யூசர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்திருந்தால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு மாறினால் இந்த சலுகை கிடைக்கும்.
இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெறுவது எப்படி?:
1. ஆப் ஸ்டோரில் Airtel Thanks செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. உங்கள் ஏர்டெல் ஃபோன் நம்பரை பயன்படுத்தி ஆப்பை ஓபன் செய்து, மேல் வலது மூலையில் உள்ள "டிஸ்கவர் ஏர்டெல் தாங்ங்ஸ்" என்பதை கிளிக் செய்யவும்.
3. கீழே ஸ்க்ரோல் செய்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷனை கண்டறிந்து, "கிளைம்" பட்டனை க்ளிக் செய்யவும். இந்த ஆஃபரை பெறுவதற்கான பிளானில் இருந்தால் மட்டுமே இந்த ஆப்ஷன் உங்களுக்கு காட்டப்படும்.
4. நீங்கள் Amazon Prime Login பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். 5. உங்கள் Reward-ஐ பெற, உங்கள் login விவரங்களை உள்ளிடவும். அவ்வளவுதான். உங்களுக்கு ஏர்டெல் பிரைம் மெம்பர்ஷிப் கிடைத்துவிடும்.
6. இந்த சலுகை 2024 ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே, நீங்கள் இந்த சலுகையைப் பெற விரும்பினால், உடனடியாக ஏர்டெல் தாங்க்ஸ் ஆப்பில் கிளைம் செய்யுங்கள்.
இந்த சலுகை மூலமாக ஏர்டெல் யூசர்கள், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெறலாம். அதன் மூலம் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 1 நாள் டெலிவரி, பிரைம் டே விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் சிறப்பு தயாரிப்பு சலுகைகள் போன்ற பல பலன்கள் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications