"ஒரு மாசம் தான் டைம்!" பல லட்சம் ஜிமெயில் கணக்குகளை டெலிட் செய்யும் கூகுள்.. உடனே இதை செய்யுங்க
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் அடுத்த மாதம் பல லட்சம் ஜிமெயில் கணக்குகளை டெலிட் செய்ய உள்ளது. எதற்காகக் கூகுள் இதைச் செய்கிறது. உங்கள் கணக்குகளும் டெலிட் செய்யப்படும் ஆபத்து இருக்கிறதா என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த நவீன காலத்தில் கூகுள் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை. இப்போது நாம் கூட எந்தவொரு விஷயத்தையும் கூகுளிடமே கேட்கிறோம். கூகுள் இல்லாமல் இணையத்தை யோசிப்பதே கடினம் என்ற சூழலே இருக்கிறது.

இதனால் டெக் உலகில் மன்னர் போலவே கூகுள் இருந்து வருகிறது. அதேநேரம் கூகுளில் பலரும் கணக்குகளைத் தொடங்கிவிட்டு, அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் கூகுள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது.
கூகுள்: அப்படி முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளைச் சரி செய்யக் கூகுள் இப்போது நடவடிக்கை எடுக்கிறது. ஜிமெயில் கணக்குகளை முறையாகப் பயன்படுத்தாத நபர்கள் அடுத்த மாதம் தங்கள் ஜிமெயில் கணக்குகளை இழக்க வாய்ப்பு உள்ளது. அதாவது டிச. 2023க்கு பிறகு பல லட்சம் ஜிமெயில் கணக்குகள் டெலிட் செய்யப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் டெலிட் செய்யப்படும் அபாயம் இருக்கிறது.
கடந்த மே மாதம் கூகுள் துணைத் தலைவர் ரூத் கிரிசெலி இது குறித்துக் கூறுகையில், "பயனாளர்கள் பாதுகாப்பு கருதி, அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து கூகுள் கணக்குகளை நாங்கள் நீக்குகிறோம். ஜிமெயில் மட்டுமின்றி Docs, Drive, Meet, Calendar மற்றும் Google Photos என அனைத்து தரவுகளும் நீக்கப்படும்
என்ன காரணம்: பொதுவாக இதுபோன்ற கணக்குகளில் பழைய மற்றும் பலவீனமான பாஸ்வேர்டுகள் தான் இருக்கும். அவை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம்.. மேலும், கூடுதலாக டூ பேக்டர் ஆத்தென்டிகேஷன் உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இருக்காது. இதனால், அந்த கணக்குகளை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம். இதனால் அந்த கணக்குகளை வைத்து மோசடி நடக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் பழைய கணக்குகளை டெலிட் செய்யும் நடவடிக்கையை எடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
யாருக்கு ஆபத்து: கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் மட்டுமே டெலிட் செய்யப்படும். அதேபோல தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பள்ளிகள் அல்லது நிறுவனங்களில் கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தாலும் அவை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: உங்கள் கூகுள் கணக்குகள் டெலிட் ஆகாமல் இருக்க அதை லாகின் செய்தால் போதும். கடந்த இரண்டு ஆண்டுகளில் உங்கள் கணக்குகளை லாகின் செய்யாமல் இருந்தால் அதை லாகின் செய்தாலே போதும், உங்கள் கணக்கு டெலிட் ஆகாது. ஜிமெயில் என்று இல்லை, மேற்கூறிய எந்தவொரு கூகுள் கணக்கில் லாகின் செய்தாலும் போதும் உங்கள் ஜிமெயில் டெலிட் செய்யப்படாது.
அதாவது, மெயில் படிப்பது, மெயில் அனுப்புவதும், கூகுள் ஹாட்ர் டிரைவ் பயன்படுத்துவது, கூகுள் ப்ளே ஸ்டோரில் எதாவது செயலியைப் பயன்படுத்துவது, கூகுளை சேர்ச்சுக்கு பயன்படுத்துவது ஆகியவை மூலம் கூகுள் கணக்குகள் டெலிட் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன் அந்த குறிப்பிட்ட கணக்கில் இருந்து யூடியூப் வீடியோவைப் பார்த்தால் கூட போதும். உங்கள் கணக்குகள் டெலிட் ஆகாது. மேலும், உங்கள் கூகுள் கணக்கில் கூகுள் ஒன் அல்லது ஏதேனும் ஒரு கூகுள் சப்ஸ்கிரிப்ஷன் இருந்தாலும் அது டெலிட் செய்யப்படாது என்று கூகுள் அறிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications