ஆண்ட்ராய்டில் இருந்து ஐ போனுக்கு மாறப் போறீங்களா? 7 ஸ்டெப்ஸ்ல மொத்த டேட்டாவையும் ஈசியா மாத்திடலாம்!
சென்னை: ஆண்ட்ராய்டில் இருந்து ஆப்பிளுக்கு மாறும் திட்டத்தில் இருக்கிறீர்களா? ஐ போன் ஆஃபர்கள் வருகின்றன.. ஆனால், புகைப்படங்கள், வீடியோக்கள், டேட்டாவை டிரான்ஸ்பர் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் யோசிக்கிறீர்களா? டோன்ட் வொர்ரி! ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஆப்பிளுக்கு மாறுவது ரொம்பவே சிம்பிள்.. 7 எளிய ஸ்டெப்களில் மொத்தத்தையும் முடித்து விடலாம்.
அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தை 2023ன் முதல் காலாண்டில் 17 சதவிகிதம் சரிந்தாலும், Apple iPhone அதன் மார்க்கெட் ஷேரை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அதிகமான ஆண்ட்ராய்டு யூசர்கள் ஆப்பிளுக்கு மாறுகிறார்கள் என்று மார்க்கெட் அனலிடிக்ஸ் நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை கூறுகிறது.

ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறுவது ஈசி: நம்மில் பெரும்பாலானோரும் ஆண்ட்ராய்டில் இருந்து ஐ போனுக்கு மாறும் திட்டத்தில் இருக்கலாம். யூசர் டேட்டா பாதுகாப்பு, ரிச் லுக், கேமரா குவாலிட்டி உள்ளிட்ட பல காரணங்களுக்காக நாம் ஆப்பிள் போன் வாங்க நினைத்தாலும், தற்போதைய ஆண்ட்ராய்டு போனில் இருந்து எல்லா தகவல்களையும் ஆப்பிளுக்கு மாற்றுவது சிரமமாக இருக்கும் என நினைத்து பலரும் தங்கள் ஐடியாவை தள்ளிப்போட்டு வருவோம்.
ஆனால், இப்போது ஆண்ட்ராய்டில் இருந்து ஐ போனுக்கு அத்தனை டேட்டாக்களையும் மூவ் செய்வது ரொம்பவே ஈசி. இதற்கு எந்தவித தேர்டு பார்ட்டி வஸ்துகளும் தேவையில்லை. நமது காண்டாக்ட்ஸ், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாட்ஸ் அப் சாட் போன்ற அனைத்து முக்கியமான தரவுகளையும் iOS போனுக்கு ஆப்பிளின் ஒரு சின்ன ஆப் மூலமாக எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டில் இருந்து ஐ போனுக்கு மாறுவதைத் தொடங்க, யூசர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் "Move to iOS" ஆப்பை பதிவிறக்கி சிம்பிளான வழியில் அனைத்தையும் மூவ் செய்யலாம். கான்டாக்ஸ், மெசேஜஸ், வாட்ஸ்அப் டேட்டா, புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் காலண்டர் நோட்ஸ் ஆகியவற்றை ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு பாதுகாப்பாக மாற்றுவதை இந்த ஆப் உறுதி செய்கிறது.

ஆண்ட்ராய்டு போனில் ஐபோனுக்கு எப்படி மாறுவது என்பதற்கான 7 எளிய ஸ்டெப்புகள் இங்கே:
1. யூசர்கள் தங்கள் Android போனில் Wi-Fi இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் ஐபோனை ஆன் செய்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். புதிய ஐபோனை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அருகில் இருப்பதை உறுதி செய்யவும்.
2. "Quick Start" திரையில், "Set up Manually " என்பதைத் தேர்ந்தெடுத்து, "Move data from Android" ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. உங்கள் Android போனில் Move to iOS ஆப்பை திறக்கவும். பின்னர் "Continue" என்பதைத் தொட்டு, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து, ஏற்கவும். ஐபோனுக்குச் சென்று, "Move on Android" என்ற மெசேஜ் தோன்றியவுடன் "Continue" என்பதைத் தட்டவும்.

4. ஆறு இலக்க அல்லது பத்து இலக்கக் குறியீடு காண்பிக்கப்படும் வரை காத்திருக்கவும். ஐபோனில் வரும் குறியீட்டு எண்ணை உங்கள் Android மொபைலில் அழுத்தவும்.
5. ஐபோன் ஒரு தற்காலிக வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கும். உங்கள் Android போனில் இந்த வைஃபை நெட்வொர்க்கை இணைக்கவும். பின்னர், ஸ்கிரீனில் டேட்டா டிரான்ஸ்பர் அறிவிப்பு தெரியும்.
6. ஆண்ட்ராய்டு போனில் "Continue" என்பதைத் தொடுவதன் மூலம் நீங்கள் iPhone க்கு மாற்ற விரும்பும் உள்ளடக்கத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
7. ஐபோனில் லோடிங் பார் நிறைவடைந்ததும், ஆண்ட்ராய்டு மொபைலில் "Done" என்பதைக் கிளிக் செய்யவும். ஐபோனில், "Continue" என்பதைத் தொட்டால் செட்டப் முடிந்துவிடும். அவ்வளவுதான். நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து ஐபோனுக்கு நீங்கள் விரும்பிய தகவல்கள் அனைத்தையும் எளிதாக மாற்றிவிட்டீர்கள். இனி ஐபோன் யூசராக தொடரலாம்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications