டைம் ட்ராவல்.. நிஜமாகவே காலம் கடந்து போக முடியுமா? ஐன்ஸ்டீன் முதல் ஹாக்கிங் வரை சொன்னது இதுதான்!
சென்னை: ஹாலிவுட் படம் பார்க்கும் பலருக்கும், அறிவியல் புனை கதைகள் மீது ஈர்ப்பு கொண்டவர்களுக்கும் 'டைம் ட்ராவல்' பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் டைம் ட்ராவல் சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பதற்கு சரியான விடைகள் தற்போது வரை கிடைக்கவில்லை. ஆனால் இது குறித்து ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோர் பல தகவல்களை சொல்லி சென்றிருக்கின்றனர்.
நம் வாழ்க்கையில் சாதாரணமாக பார்க்கும் ஒளியானது ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வரை பயணிக்கும். மனிதர்கள் இந்த வேகத்தில் போனால் என்ன ஆகும்? என்று ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள தொடங்கினார்கள். இப்படியான ஆய்வுகளில் ஒளியின் வேகத்தில் சென்றால் காலப்பயணம் சாத்தியம் என்று ஆய்வுகள் தெரிவிக்க, பலரும் அதற்கு முயற்சித்தனர். ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும், குறிப்பிட்ட வேகத்தை மனிதர்களால் கடக்க முடியவில்லை.

என்னடா இது என எல்லோரும் மண்டையை போட்டு குழம்பிக்கொண்டிருந்த நிலையில்தான் ஐன்ஸ்டீன் சீனுக்குள் வருகிறார். "நீங்க எவ்வளவுதான் முயன்றாலும் ஒளியின் வேகத்திற்கு போக முடியாது" என்று அடித்து சொன்னார். எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. அதெப்படிங்க நீங்க அவ்வளவு கரெக்டா சொல்றீங்க? என கேள்வி கேட்க அவர் எளிமையான விளக்கத்தை கொடுத்தார்.
10 கி.மீ வேகத்தில் நின்றுக்கொண்டிருக்கும் மற்றொரு ரயில் மீது மோதினால் பாதிப்பு எப்படி இருக்கும்? நிச்சயம் பாதிப்பு குறைவாகதான் இருக்கும். காரணம் ரயில் மெதுவாக செல்கிறது. ஆனால் இதே ரயில் 100 கி.மீ வேகத்தில் மோதினால்? நிச்சயம் பேரழிவு உண்டாகும். இதற்கு காரணம் ரயிலின் வேகம்தான் என்று நீங்கள் நினைக்கலாம். அங்குதான் ஐன்ஸ்டீன் ஒரு டிவிஸ்ட் வைத்தார்.
இந்த பேரழிவுக்கு காரணம் ரயிலின் எடைதான் என்று அவர் கூறினார். ஒரு பொருள் எவ்வளவு வேகத்தில் போகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் எடை அதிகரிக்கும். எனவேதான் பாதிப்பும் அதிகமாகிறது. இப்போது இத்துடன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது வெயிட் அதிகமாக இருக்குற பொருளை நகர்த்த கூடுதல் பவர் தேவை. பவர் சும்மா கிடைக்காது, ரயிலில் நிலக்கரி இருந்தால்தான் கூடுதல் பவர் கிடைக்கும். அப்படி எனில் கூடுதல் எரிபொருள் எடுத்து செல்ல ரயிலில் கூடுதல் பெட்டியை சேர்க்க வேண்டி இருக்கும்.
ஆக இப்படியாக ரயிலில் எவ்வளவு கூடுதல் பெட்டிகளை சேர்த்து ரயிலின் வேகத்தை கூட்டினாலும், கூடுதலாக சேர்க்கப்பட்ட பெட்டியின் எடை இந்த வேகத்தை குறைத்துவிடும். எனவே நம்மால் ஒளியின் வேகத்திற்கு போக முடியாது என்று விளக்கினார். இதனுடைய எளிய ஃபார்முலாதான் E=mc2.
இதற்கு பின்னர்தான் டைம் ட்ராவல் குறத்து ஏராளமான பேச்சுகள் அடிப்பட தொடங்கின. எது முடியாது என்று சொல்லப்படுகிறதோ அதைதான் நம் ஆளுங்க தோண்டி தோண்டி ஆராய்ச்சி செய்வார்கள். அதுபோலதான் இந்த டைம் ட்ராவல். காலப்பயணம் எனப்படும் டைம் ட்ராவல் செய்தால் மனிதர்களுக்கு வயதே ஆகாது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் என்ன? எப்படியாவது டைம் ட்ராவல் செய்துவிட வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் வந்துவிட்டது. இந்த ஆசையில் உதித்த கற்பனைகள் சினிமாவாக சிறகு விரித்து பறக்க தொடங்கின.

என்னதான் முயன்றாலும், ஒளி வேகத்திற்கு மனிதர் போக முடியாது என்பதை ஆய்வாளர்கள் உணர தொடங்கினார்கள். பின்னர் டைம் ட்ராவல் என்பது கட்டுக்கதை என்று கூறி பலரும் இது குறித்து பேசுவதை தவிர்க்க நினைத்தனர். இப்படி இருக்கையில், தலைவன் ஐன்ஸ்டீன் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார். அப்போது அவர் கண்டுபிடித்திருந்த விஷயம் மீண்டும் டைம் ட்ராவல் பற்றிய ஆர்வத்தை அனைவருக்கும் தூண்டியது.
அப்படி என்ன கண்டுபிடித்தார் என்று கேட்கிறீர்களா? அவர் கண்டுபிடித்தது 'வாம்ஹோல்' (wormholes). 1935 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் நாதன் ரோசன் ஆகியோர் சேர்ந்து இதனை கோட்பாட்டு ரீதியாக கண்டுபிடித்தனர். அறிவியலை பொறுத்த அளவில், அதுவும் இயற்பியல் அறிவியலை பொறுத்த அளவில் கோட்பாடுகள்தான் முதலில் பிறக்கும். பின்னர்தான் கண்டுபிடிப்புகள் நிகழும்.
ஆக இவர் கண்டுபிடித்த இந்த வாம்ஹோல் வழியாக காலப்பயணம் சாத்தியம் என்று கூறப்பட்டது. ஒளி, ஒளியின் வேகம், டைம் ட்ராவல், வாம்ஹோல் என அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் யாருக்கு உதவியதோ இல்லையோ, கற்பனையாளர்களுக்கு நன்றாக உதவியது. இது தொடர்பாக ஏராளமான அறிவியல் புனைவு படங்கள் வெளியாகின. அதேபோல சில கட்டுக்கதைகளும் பரவியது.
அதாவது கடந்த காலத்தில் பலர் டைம் ட்ராவல் செய்து நம்முடன் உயிரோடு இருக்கிறார்கள் என்றும், அப்படிப்பட்ட ஆள் நான்தான் எனவும் பலர் கதைகளை அவிழ்த்துவிட தொடங்கினர். இந்த சூழலில்தான் தளபதி என்ட்ரி தொடங்கியது. ஸ்டீபன் ஹாக்கிங் இந்த கட்டுக்கதைகளை மறுத்தது மட்டுமல்லாது, அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தார்.
அதாவது ஒளியின் வேகத்தில் போனால் மனிதர்களுக்கு வயதாகாது. இதே ஒளியை விட வேகமாக போனால் மனிதர்கள் தங்களுடைய இறந்த காலத்திற்கு செல்லலாம். இதுதான் நாம் சினிமாவில் பார்க்கும் டைம் ட்ராவல். எனவே பலரும் தாங்கள் இறந்த காலத்திலிருந்து வந்ததாக கூறி கொண்டிருந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு சீக்ரெட் பார்ட்டி நடத்தப்பட்டது. அந்த பார்ட்டி நடத்தி முடிக்கும் வரை அது குறித்து யாருக்கும் தெரியாது.
இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன. ஸ்டீபன் ஹாக்கிங் மட்டும் அந்த பார்ட்டியில் இருந்தார். பார்ட்டி முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை அழைத்து, "டைம் ட்ராவல் சாத்தியமில்லை. குறிப்பாக இறந்த காலத்திற்கு செல்வது என்பது நடக்காத காரியம்" என்று கூறினார். அதற்கு ஆதாரமாகதான் இந்த பார்ட்டி நடத்தது. அதாவது யாராவது காலப்பயணம் செய்திருந்தால் இந்த நேரத்தில் இப்படி ஒரு பார்ட்டி நடக்கும் என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும்.
எனவே நிச்சயம் இந்த பார்ட்டிக்கு அவர்கள் நிச்சயம் வந்திருப்பார்கள். ஆனால் அப்படி யாரும் இந்த பார்ட்டிக்கு வரவில்லை. எனவே டைம் ட்ராவல் சாத்தியமில்லை என்று கூறினார். ஆனாலும் இன்று வரை இது குறித்து பல்வேறு தகவல்கள் தவறாக பரவி வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications