ஓடிடி யூசர்களுக்கு வெறும் 100 ரூபாயில் சூப்பரான பிளான்.. 90 நாளுக்கு இலவசம்.. அடிச்சு தூக்கும் ஜியோ!
சென்னை: ஜியோ நிறுவனம் வெறும் 100 ரூபாய்க்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை நீண்ட நாட்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான ரீசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 100 ரூபாய் பிளானில் 299 ரூபாய் திட்டத்துக்கான சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்தியாவின் டாப் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 49 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடும் போட்டி கொடுத்து வந்தாலும் ஜியோ தொடர்ந்து மலிவு விலை திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப மலிவான மற்றும் விலையுயர்ந்த திட்டங்களை வழங்குகிறது ஜியோ. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலை ரூ.100 திட்டத்தில் ரூ.299 மதிப்புள்ள OTT சலுகைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக மொபைல் அல்லது டிவியில் ஓடிடி ஸ்ட்ரீமிங் கண்டெண்ட் அனுபவிக்கும் மற்றும் நீண்ட வேலிடிட்டி கொண்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற பிளானை விரும்பும் யூசர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.100 திட்டம், ரூ.299 திட்டத்தில் இருக்கும் நன்மைகளை வழங்குகிறது. வெறும் ரூ.100க்கு வழங்கப்படும் இந்த திட்டத்தின் வேலிட்டி காலம் 90 நாட்கள் இந்த பிளானில் மொத்தமாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. OTT பலன்களை பொறுத்தவரை 90 நாட்கள் ஜியோ ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.
ஓடிடி பிரீமியம் சந்தாக்களுக்கு அதிக செலவு செய்யாமல் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்புவோருக்கு இந்தத் திட்டம் பெஸ்ட் சாய்ஸ். இந்த 100 ரூபாய் திட்டம் அற்புதமான நன்மைகளை வழங்குகிறது என்றாலும், வாடிக்கையாளர்கள் 2 முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த சலுகையைப் பயன்படுத்த உங்கள் ஜியோ எண்ணில் செயலில் உள்ள பேஸ் பிளான் இருக்க வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் உதவியுடன் உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க முடியாது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications