Jio Recharge: அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையே இல்லை.. ஜியோ-வின் ஒரே பிளானில் 164 ஜிபி டேட்டா!
சென்னை: நீண்ட வேலிடிடிட்டியுன் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் அன்லிமிட்டட் ரீசார்ஜ் பிளான்களை தேடுகிறீர்கள் என்றால் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பரான பிளானை தருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 49 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஐடியா, அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடும் போட்டி கொடுத்து வந்தாலும் ஜியோ தொடர்ந்து மலிவு விலை திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

ஜியோ நிறுவனம் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத வகையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் பல்வேறு திட்டங்கள் வந்துவிட்டன.
அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ, நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்து, நீண்ட வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் பிளானை தேடினால் உங்களுக்காகவே ஒரு அருமையான பிளான் உள்ளது.
2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி காலத்தையும், 2 ஜிபி-க்கு மேல் தினசரி டேட்டாவையும் நீங்கள் விரும்பினால், ஜியோவின் ரூ.799 ரீசார்ஜ் திட்டம் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ நிறுவனம் 72 நாட்கள் நீண்ட வேலிடிட்டியை வழங்குகிறது. 72 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிட்டட் அழைப்புகளை நீங்கள் செய்யலாம்.
ரூ.799 ரீசார்ஜ் பிளானில் ஜியோ தமது வாடிக்கையாளர்களுக்கு 72 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் 72 நாட்களுக்கு மொத்தம் 144 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். அதோடு கூடுதலாக இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 20 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் மொத்தம் 164 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தி மகிழலாம்.
ஜியோ இந்த பிளானில் யூசர்களுக்கு சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. நீங்கள் இந்த பிளானில் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவைப் பெறலாம். இது தவிர, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் வசதியும் கிடைக்கும். இதே ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் டிவி சேனல்களை அணுக ஜியோ டிவி சந்தாவையும் வழங்குகிறது. இதுபோன்ற பல நன்மைகள் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவை போலவே ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற நன்மைகளைக் கொண்ட சில ரீசார்ஜ் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications