தட்டித் தூக்கிய ஜியோ.. டஃப் ஃபைட் கொடுக்கும் ஏர்டெல்.. இந்தியாவில் எத்தனை கோடி யூசர்கள் பாருங்க!
சென்னை: ஒரே மாதத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று டெலிகாம் சேவையில் ஜியோ புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது.
டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய போட்டி நிறுவனங்களை விடவும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்கி வருகிகிறது ஜியோ.

இதனால் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோ நிறுவனத்துக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ, 21.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் TRAI தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் புதிய சந்தாதாரர்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஜியோ.
நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்த மார்ச் மாதத்தில் 12.5 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.98 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், வோடபோன் ஐடியா நிறுவனம், மார்ச் மாதத்தில் 5,41,377 வாடிக்கையாளர்களை இழந்தது. வோடபோன் ஐடியா சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20.5 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்தில், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 49,177 சந்தாதாரர்களைப் பெற்றது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 9 கோடியாக உள்ளது. ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் கோபுரங்களுடன் நாடு முழுவதும் தனது சொந்த 4G நெட்வொர்க்கை வெளியிட பி.எஸ்.என்.எல் தற்போது இலக்கு வைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, மார்ச் மாதத்தில் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 32 லட்சம் அதிகரித்து 116 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 4.86 மில்லியன் கிராமப்புற வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.64 மில்லியன் குறைந்துள்ளது.
ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் செயலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 92.85%. பிப்ரவரியில் 106 கோடியாக இருந்த மொத்த செயலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 107 கோடியாக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications