Jio Recharge: 20 GB டேட்டா எக்ஸ்ட்ரா.. ஜியோ வழங்கும் சூப்பரான 2 பிளான்கள்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
சென்னை: ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 2 சூப்பரான பிளான்களில் 20 ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான்களைப் பற்றி பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 49 கோடிக்கும் அதிகமான யூசர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் தற்போது சூப்பரான சில பிளான்களை கொண்டு வந்துள்ளது. இந்த பிளான்களில் ஜியோ தமது வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

அதிக டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த பிளானில் 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை எவ்வளவு, இந்த திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
ஜியோவின் ரூ.749 ரீசார்ஜ் பிளான்
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.749. ஜியோவின் இந்த ரீசார்ஜ் பிளான், தினசரி அதிக டேட்டாவை பயன்படுத்தும் யூசர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பிளான் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது, 72 நாட்களுக்கு நீங்கள் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பைச் செய்து கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைக்கும்.
டேட்டாவை பொறுத்தவரை மொத்தமாக 164 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பை கடந்துவிட்டாலும் அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும். 72 நாட்கள் வரை இந்த 20 ஜிபி கூடுதல் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. இது தவிர, 50 ஜிபி AI கிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் யூசர்கள் ஜியோ டிவிக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் பிளான்
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.899. ஜியோவின் இந்த ரீசார்ஜ் பிளானும், தினசரி அதிக டேட்டாவை பயன்படுத்தும் யூசர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதாவது, 90 நாட்களுக்கு அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டட் கால்ஸ் இலவசம். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.
டேட்டாவை பொறுத்தவரை மொத்தமாக 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் 90 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா வரம்பை கடந்துவிட்டாலும் அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும். 90 நாட்கள் வரை இந்த 20 ஜிபி கூடுதல் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது. இது தவிர, 50 ஜிபி AI கிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் யூசர்கள் ஜியோ டிவிக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள். ஜியோ ஹாட்ஸ்டார், ஜியோ AI கிளவுட் ஸ்டோரேஜை உங்களது ஜியோ நம்பர் மூலமாகவே அணுகலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications