அள்ளிக் கொடுக்கும் ஜியோ.. போனஸ் டேட்டா.. ஸ்பெஷல் வவுச்சர்.. 3 ரீசார்ஜ் பிளான்களில் சரவெடி ஆஃபர்கள்!
சென்னை: ஜியோ நிறுவனம், 7ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ஆஃபர்களை அறிவித்தது. இந்த ஆஃபர்கள் இந்த மாதம் 30ஆம் தேதியோடு முடிவடைய உள்ளன. அதற்குள் இந்த ஆஃபர் ரீசார்ஜ்களை செய்து பயன்பெறலாம். இந்த சிறப்பு சலுகைகள், கூடுதல் டேட்டா, கூப்பன் சலுகை விவரங்களை பார்க்கலாம்.
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம் 2015 டிசம்பர் 27ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது. எனினும், 2016 செப்டம்பர் 5ஆம் தேதி தான் ஜியோ நிறுவனம் தனது சேவைகளை தொடங்கியது. இன்றைய தேதியில் இந்தியாவின் மிகப்பெரும் மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக இருந்து வருகிறது ஜியோ.

டெலிகாம் டான் ஆன ஜியோ: மிகக்குறுகிய காலகட்டத்தில், போட்டி நிறுவனங்களை வீழ்த்தி, சர்வதேச அளவில் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் எனும் இடத்தைப் பிடித்துள்ளது ஜியோ. ஜியோவின் ஏகபோக வளர்ச்சிக்குக் காரணம், ஜியோ அள்ளித் தெளித்த ஆஃபர்கள் தான். ஜியோ நிறுவனம் அளித்த சலுகைகளுக்கு முன்பாக நிற்க முடியாமல் பல டெலிகாம் நிறுவனங்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தன.
இந்த நிலையில் ஜியோ தனது 7-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் சிறப்பு ஆஃபர்களை வழங்கி வருகிறது ஜியோ. இந்த சூப்பரான ஆஃபர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 3 ரீசார்ஜ் திட்டங்களில் ஆஃபர்களை வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். இந்த ரீசார்ஜ்களில் கூடுதல் டேட்டா, சிறப்பு கூப்பன்களும் வழங்கப்படுகின்றன. அவற்றின் விவரம்

ரூ.299 பிளான்: ஜியோவின் ரூ.299 திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு இதில், வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டா வசதியைப் பெறுவார்கள். அதாவது, வாடிக்கையாளர்கள் மொத்தம் 28 நாட்களில் 56 ஜிபி டேட்டா வசதியைப் பெறுகிறார்கள். இத்துடன் ஜியோ ஆப்ஸ் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 7 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.
ரூ.749 பிளான்: ஜியோவின் ரூ.749 திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் அன்லிமிட்டட் கால், தினசரி 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த ரீசார்ஜ் பிளானில், வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவையும் பெறுவார்கள். இந்த பிளானில் சிறப்பு சலுகையாக 14 ஜிபி கூடுதலாக வழங்கப்படும்.
ரூ. 2999 பிளான்: ஜியோவின் ரூ 299 திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிட்டட் அழைப்பு, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வசதி இந்த திட்டத்தில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் 2.5 ஜிபி தினசரி டேட்டா வீதம் மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவார்கள். ஜியோவின் இந்த பிளானில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெற முடியும். இதனுடன், இந்த திட்டத்தில் சிறப்பு சலுகையாக 21 ஜிபி கூடுதல் வழங்கப்படும்.
இதோடு கூடுதல் சலுகையாக ஏஜியோவில் பர்ச்சேஸ் செய்யும் போது ரூ.200 ஆஃபர், ஸ்விக்கியில் ரூபாய் 100 தள்ளுபடி, நெட் மெட்ஸ் தளத்தில் 20% ஆஃபர் மெக்டொனால்ட்ஸில் ரூ.149 அதிகமாக உணவு ஆர்டர் செய்யும்போது சலுகை அளிக்கப்படும். ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10% சலுகை, யாத்ரா ஆப் பயன்படுத்தும் போது விமானங்களில் ரூ. 1500 ஆஃபர், ஹோட்டல்களில் 15 சதவீதம் தள்ளுபடி ரூ. 4000 வரையில் வழங்கப்படும்.
முழு விவரத்தை அறிய ஜியோ இணையதளத்தைப் பார்வையிடலாம். My Jio ஆப் வழியாக ரீசார்ஜ் விவரங்களை அறிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யலாம். இந்த 3 சிறப்பு ஆஃபர்களும் செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் என்பதால், ஆஃபரை பெற விரும்புவோர் ரீசார்ஜ் செய்யலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications