Jio Recharge: ஒரே ரீசார்ஜ்.. ஓஹோ பலன்கள்.. மாதா மாதம் தொல்லை இல்லை.. ஒரு நாளைக்கு வெறும் ரூ.10 தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பட்ஜெட்டுக்கு ஏற்ற வருடாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை கொண்டுள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டட் கால்ஸ், தினசரி 2.5 ஜிபி டேட்டா, ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு, நீண்ட கால வேலிடிட்டி திட்டங்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஜியோவின் வருடாந்திர திட்டம் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையை நீக்குவதோடு, பல டிஜிட்டல் நன்மைகளையும் கொண்டுள்ளது.

Jio recharge mobile

போட்டி போடும் டெலிகாம் நிறுவனங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்கள் புதுப்புது ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டு அறிமுகப்படுத்தி வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ தமது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப ஏராளமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மேலும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான பிளான்களை வழங்குகிறது ஜியோ.

ஜியோ ரூ.3,599 ரீசார்ஜ் பிளான்

ரூ.3599 விலையில் கிடைக்கும் இந்த ரீசார்ஜ் பிளான், மாதா மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையை இல்லாமல் ஆக்குகிறது. ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டால், அடுத்து பிளான் விலை ஏறுமோ, பிளான் மாறுமோ என்ற கவலை இன்றி இருக்கலாம். இந்த பிளானில் கிடைக்கும் நன்மைகள் கீழே:

டேட்டா: ஒரு நாளைக்கு 2.5 ஜிபி (அதாவது ஒரு வருடத்திற்கு மொத்தம் 912.5 ஜிபி)
கால்ஸ்: அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்.
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம்.
கூடுதல் பலன்கள்: அன்லிமிட்டட் 5ஜி டேட்டா. தினசரி 2.5 ஜிபி டேட்டா முடிந்த பின்னரும் 64 Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்த பிளான் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி 90 நாள் சந்தாவுடன் வருகிறது.
நேரடி தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குக்காக ஜியோ டிவிக்கான அக்சஸும் கிடைக்கும்.
50 ஜிபி இலவச ஜியோகிளவுட் AI சேமிப்பகமும் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 10 ரூபாய்க்குள்

இந்தத் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு ரூ. 276 செலவாகும். ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.9.85 செலவாகும். அதேநேரம் இது அதிக தினசரி டேட்டா வரம்பையும் கூடுதல் பொழுதுபோக்கு சலுகைகளையும் வழங்குகிறது.

உங்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா தேவைப்பட்டால் இந்த பிளான் மிகவும் ஏற்றது. ரூ.3,599 திட்டம் குறைந்த செலவில் அனைத்து அத்தியாவசிய நன்மைகளையும் வழங்குகிறது. ரீசார்ஜ் செய்வது பற்றிய கவலை இன்றி ஒரு வருடத்திற்கு பிளான் நன்மைகளை அனுபவிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+