Jio vs Airtel: 30 நாள் ரீசார்ஜ் பிளானில் யார் கில்லி? ஜியோ - ஏர்டெல்.. இரண்டில் எது பெஸ்ட்?
சென்னை: ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், 1 மாத வேலிடிட்டி கொண்ட பிளான்களை தேடுகிறீர்கள் என்றால் இந்த 2 பிளான்கள் உங்களுக்கு உதவக்கூடும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான மொபைல் போன் யூசர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். யூசர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இரு பெரும் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.335 திட்டம்
ஜியோ தமது கோடிக்கணக்கான பயனர்களுக்கு பல சூப்பரான திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் ஒன்று ரூ.335 திட்டம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள். 30 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது.
டேட்டாவை பொறுத்தவரை யூசர்கள் இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதில் தினசரி இவ்வளவுதான் பயன்படுத்தலாம் என்ற லிமிட் இல்லை. மேலும், இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும்.
50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் இலவச அணுகலும் கிடைக்கும். உங்கள் வீட்டில் வைஃபை இருந்தால், உங்களுக்கு மொபைலில் அதிக டேட்டா தேவையில்லை என்றால், இந்த பிளானை தேர்வு செய்யலாம்.
ஏர்டெல் ரூ.379 திட்டம்
ஏர்டெல், அதன் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 379 ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. இந்த திட்டத்தில், யூசர்கள் அன்லிமிட்டட் அழைப்பு மற்றும் 30 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.
இது தவிர, டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அதாவது, ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலிக்கான இலவச அணுகலும் கிடைக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications