ராக்கெட் அனுப்பும் அம்பானி.. இனி சாட்டிலைட் மூலம் இணைய சேவை.. என்ன புயல் வந்தாலும் நோ ப்ராப்ளம்
டெல்லி: ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்ற ஒரு கலக்கலான திட்டத்தை ஜியோ நிறுவனம் மிக விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இதற்கான ஒப்புதல்கள் விரைவில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
நமது நாட்டில் டெலிகாம் துறையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனம் என்றால் அது ஜியோ தான். ஜியோவுக்கு முன்பு ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி என்ற இருந்த நிலை, ஜியோவுக்கு பிறகு தினசரி 2 ஜிபி என்று ஆனது.

இப்போது நமது நாட்டில் டாப் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ நிறுவனம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்ற புதிய சேவையை ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்க உள்ளது.
ஜியோ: இது சாட்டிலைட் அடிப்படையில் வழங்கப்படும் அதிவேக ஃபைபர் இணையச் சேவையாகும். இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இந்தியத் தேசிய விண்வெளி ப்ரோமோஷன் மற்றும் அங்கீகார மையத்திற்கு (IN-SPAce) ஜியோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பட்சத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான நாட்டில் இயங்கும் முதல் ஃபைபர் இணையச் சேவையாக நிறுவனம் என்ற சிறப்பை ஜியோ பெறும்.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகையில், "நமது நாட்டில் சாட்காம் எனப்படும் சாட்டிலைட் அடிப்படையிலான இணையச் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களும் ஜியோ நிறுவனத்திற்கு விரைவில் கிடைக்கும் எனத் தெரிகிறது. நமது நாட்டில் சாட்டிலைட் மூலம் சேவைகளைப் பெற வேண்டும் என்றால் பாதுகாப்பு தொடங்கிப் பல அனுமதிகள் மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்கான பணிகளில் ஜியோ இறுதிக்கட்டத்தில் இருக்கிறது" என்றார்.
இணையச் சேவை: பொதுவாகக் கிராமப்புறங்களில் ஃபைபர் பதித்து அதிவேக இணையச் சேவை வழங்க அதிக செலவாகும். இதனால் அதற்கு எந்தவொரு நிறுவனமும் தயாராக இருக்காது. அதுபோன்ற இடங்களில் இவை பயன்படும். மேலும், இப்போது சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது இணையச் சேவை முடங்கியது. நிலத்திற்கு அடியில் பதித்த ஃபைபர் கேபிள் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம். சாட்டிலைட் மூலம் இணையச் சேவை வழங்கும் போது இந்த பிச்சினையும் வராது.

எதற்குப் பயன்படும்: கடந்த ஆண்டு நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ஜியோ நிறுவனம் அதன் ஸ்பேஸ் ஃபைபர் தொழில்நுட்பத்தை விளக்கிக் காட்டியது. அப்போது ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது ஸ்பேஸ் ஃபைபர் மூலம் குஜராத்தில் உள்ள கிர், சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர் மற்றும் அசாமில் ஓஎன்ஜிசி- ஜோர்ஹாட் ஆகிய நான் கிராமங்களுக்கு இணையச் சேவை வழங்கியுள்ளதாகக் கூறியிருந்தது.
ஏன் முக்கியம்: சாட்டிலைட் மூலம் இணையச் சேவையை வழங்க மிடியம் பூமி சுற்றுப்பாதையில் சாட்டிலைட்களை அனுப்ப வேண்டும். இதற்காக லக்சம்பேர்க்கை சேர்ந்த சாட்டிலைட் தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் எப்போது இதற்கு சாட்டிலைட்களை அனுப்புவார்கள், எப்போது இந்த ஸ்பேஸ் ஃபைபர் சேவை தொடங்க உள்ளனர் என்பது குறித்த தகவல்களை ஜியோ நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஸ்பேஸ் ஃபைபர் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், யூடெல்சாட் குழுமத்தின் ஒன்வெப் மற்றும் அமேசானின் ப்ராஜெக்ட் கைபர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். இந்த மூன்று நிறுவனங்களுமே இந்தியாவில் தங்கள் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல கிராமங்களில் அதிவேக இணையச் சேவை சென்று சேராத நிலையில், அந்த சிக்கலைச் சரி செய்ய இந்த ஸ்பேஸ் ஃபைபர் சரி செய்ய உதவும் என்றே தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications