Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது கற்பனை இல்லை நிஜம்! பைக்கை சட்டென ஹெலிகாப்டராக மாற்றி பறக்கலாம்.. அது சரி விலை எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பறக்கும் கார்கள் அல்லது வாகனங்கள் என்பது எப்போதும் நாம் கற்பனை மட்டுமே செய்யும் ஒரு விஷயமாகவே இருந்து வந்துள்ளது. படங்களில் இதுபோன்ற வாகனங்களைப் பார்த்து நாம் மிரண்டு இருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை உண்மையாக்கியுள்ளது. இந்த வண்டியில் சாலையிலும் போகலாம்.. பறக்கவும் செய்யலாம் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த காலத்தில் டிராபிக் என்பது கிட்டதட்ட எல்லா ஊர்களிலும் பெரிய பிரச்சினையாகவே மாறி வருகிறது. டிராபிக் சிக்கலுக்கு பலரும் புது புது வழிகளில் தீர்வை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். நம்மில் பலருக்கும் கூட டூவீலரில் அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். இந்த சீன நிறுவனம் அதை நிஜமாக்கியுள்ளது.

Kuickwheel Skyrider X6 Flying Bike Launched in China Price and Features Revealed

பறக்கும் வண்டி

சீனாவைச் சேர்ந்த குயிக்வீல் நிறுவனம், ஸ்கைரைடர் எக்ஸ்6 என்ற புதிய பறக்கும் எலக்ட்ரிக் மூன்று பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் ரோட்டில் வழக்கமான வாகனம் போலச் செல்லும். தேவையென்றால் அப்படியே ஹெலிகாப்டர் போல மாறி பறக்கவும் ஆரம்பித்துவிடும்.

இந்த வாகனத்தில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது இப்போது வரும் எலக்ட்ரிக் கார்களை போலவே இதிலும் செல்ப் டிரைவிங் வசதி இருக்கிறது. தரையில் போகும் போதும் சரி, வானில் பறக்கும்போதும் சரி இது தானாகவே பாதையைக் கண்டறிந்து அதற்கேற்ப செல்லும் திறன்களையும் கொண்டுள்ளது. அதேநேரம் மேனுவலாக நாமும் இதை கண்ட்ரோல் செய்யலாம். அதற்குச் சாலைக்கு ஸ்டீயரிங் வீல், பறக்கும் போது ஜாய்ஸ்டிக்கையும் இது கொண்டிருக்கிறது.

குயிக்வீல் ஸ்கைரைடர் எக்ஸ்6

குயிக்வீல் நிறுவனத்தின் ஸ்கைரைடர் எக்ஸ்6 வாகனத்தில் பின்புற சக்கர டிரைவ் பவர்டிரெய்னுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது தரையிறங்கும் போது நமக்குப் பெரியளவில் உதவுகிறது. சாலைகளில் செல்லும்போதும் சரி, வானத்தில் பறக்கும்போதும் சரி எந்தவொரு சிக்கலும் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்தே இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்த வாகனத்தில் 6-அக்சைல் மற்றும் 6-ரோட்டார் எலக்ட்ரிக் உந்துவிசை அமைப்பு இருக்கிறது. இதுவே இந்த ஸ்கீட்டர் பறக்க உதவுகிறது.

விலை எவ்வளவு!

இந்த காலம் வெறும் படங்களில் பார்த்து வந்த கற்பனை வாகனத்திற்குச் சீன நிறுவனம் உயிர் கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம். எல்லாம் சரி, இந்த பறக்கும் மோட்டர் சைக்கிளின் ரேட் எவ்வளவு.. நிச்சயம் நாம் யோசிக்க முடியாத அளவுக்கு அதிகமாகவே இருக்கும் என நீங்கள் கருதலாம்.. அது கிட்டதட்ட உண்மை தான். இதன் விலை ஜஸ்ட் $69,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.59 லட்சம்.

எவ்வளவு தூரம் போகலாம்?

குயிக்வீல் ஸ்கைரைடர் எக்ஸ்6 10.5 kWh பேட்டரியுடன் வருகிறது. இதில் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இருப்பதால் வெறும் ஒரு மணி நேரத்தில் 0-100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள் சாலையில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை செல்லலாம்.

அதேநேரம் பறக்கும் வேகமும் தூரமும் இதற்கு சற்று குறைவு தான். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை மட்டுமே பறக்க முடியும். மணிக்கு 72 கிமீ வேகத்தில் பறக்கும். அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 கிமீ வரை மட்டுமே பறக்க முடியும்.

பாதுகாப்பானதா?

எல்லாம் சரி, இது பாதுகாப்பானதாக இருக்குமா என நீங்கள் கேட்கலாம்.. பாதுகாப்பிற்குப் பஞ்சமே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொடுத்துள்ளனர். இதில் தானியங்கி டேக்ஆஃப் மற்றும் லேண்டிங், ரூட் பிளானிங், ஜாய்ஸ்டிக் மேனுவல் கண்ட்ரோல், ரிசர்வ் புரொப்பல்ஷன் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.

எதிர்பாராத சூழ்நிலைகளில் பறக்கும்போது எதாவது பிரச்சினை ஏற்பட்டால் இதில் உள்ள பாராசூட் தானாகத் திறக்கும். ஒருவேளை ஒரு மோட்டார் செயலிழந்தாலும் கூட மற்ற மோட்டார் உடனடியாக வேலை செய்யத் தொடங்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+