ஐடி துறையே ஆடிப் போய் கிடக்கு.. 6 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனம்! தலைக்கு மேல் கத்தி
நியூயார்க்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், தனது 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையின் 3 சதவீதமாகும். 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் தான் இருக்கிறது. ஏஐ வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களை வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. எப்போது யார் வேலை போகும் என்பதே தெரியாத அளவுக்கு ஐடி ஊழியர்கள் நிலை உள்ளது.
கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட தனது ஊழியர்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்கி வருகிறது. அந்த வகையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், தனது 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையின் 3 சதவீதமாகும். 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய காலகட்டங்களில், டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் மைக்ரோசாஃப்ட் கணிசமான வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மூலதனத்தை அதிகரிக்க, செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், "பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் நிலைத்துநிற்பதை உறுதிப்படுத்த, செயல்திறனில் மேம்பாடு தேவைப்படுவதால், நிறுவன மாற்றங்கள் அவசியமாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பணிநீக்கமானது, பணியில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களைக் குறிவைத்து மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக அமேசான், கூகுள், மெட்டா ஆகியவை ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. அந்த வகையில், அமேசான்: 27,000, கூகுள் (அல்பபெட்): 12,000, மெட்டா (ஃபேஸ்புக்): 21,000, ட்விட்டர்: 7,500, டெல்: 6,650, ஐபிஎம்: 3,900 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொழில்நுட்ப உலகில் ஏஐ ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதவளத்தைத் தேவைப்படுத்தாமல் பல பணிகளை தானாகவே நிறைவேற்றும் நிலைக்கு வந்துள்ளன. இதனால் பெருமளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மெருகூட்ட, ஏஐ மற்றும் கிளவுட் கம்யூட்டிங் சேவைகளில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்களை அதிகரித்து வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications