பெரிதாக திட்டம் போடும் அம்பானி.. மிக்ஸி, சோபா என இறங்கி அடிக்க திட்டம்.. ஜியோ ஸ்கூட்டி கூட வருதாம்!
டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மூலம் டெலிகாம் துறையில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதற்கிடையே அடுத்த கட்டமாக ஜியோ நிறுவனம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதற்கான திட்டம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி நடத்தி வரும் இந்த நிறுவனத்தின் முக்கிய பிஸ்னஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தான்.

ரிலையன்ஸ்: அதாவது கச்சா எண்ணெய்யை வாங்கி, அதைச் சுத்திகரித்து மீண்டும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இவர்களின் முக்கிய பிஸ்னஸ். இருப்பினும், கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தேவை குறைந்து வருகிறது. சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை குறையத் தொடங்கிவிட்டது. மின்சார வாகனங்கள் இதற்குக் காரணமாகும். வரும் காலத்தில் கச்சா எண்ணெய் தேவை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனமும் மற்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதில் முதன்மையானது தான் ஜியோ. டெலிகாம் துறையில் அதிரடியாக நுழைந்த ஜியோ நிறுவனத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ இருக்கிறது.
அடுத்த பிளான்: தொடர்ந்து அடுத்த கட்டமாக இப்போது பைனான்ஸ் துறையில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜியோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தைத் தனியாகத் தொடங்கியுள்ளனர். மேலும், கூல் டிரிங்ஸ் துறையிலும் கால் பதிக்க கேம்ப கோலா பெயரில் கூல் டிரிங்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்: அடுத்து இப்போது எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவிலும் அம்பானி நுழைந்துள்ளார்.. இதற்காக வைசர் (Wyzr) என்ற பெயரில் தனி நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த பிராண்டில் வெளியாகும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என்பதே இதன் முக்கிய சிறப்பாகும். ஏர் கூலர், ஃபேன், மிக்ஸி, சோபா என்று A டூ Z எல்லா பொருட்களும் இந்த வைசர் பிராண்டில் வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுக்க ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூம்கள் இருக்கும் நிலையில், அதன் மூலம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதே ஜியோ நிறுவனத்தின் திட்டமாகும். அதேநேரம் ரிலையன்ஸ் எலக்ட்ரானிக் துறையில் நுழைவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே ரீகனெக்ட் என்ற பெயரில் எலக்ட்ரானிக் துறையில் ரிலையன்ஸ் நுழைந்து இருந்தது. ஆனால், அதில் அனைத்து பொருட்களும் வேறு நிறுவனத்திடம் இருந்து வாங்கி மட்டுமே ரிலையன்ஸ் விற்றது. இதனால் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை.
அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இந்த வைசர் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் சொந்தமாகத் தயாரிக்கிறது. கேம்ப கோலாவை போலவே இதையும் மெல்ல விரிவுபடுத்துவதே ரிலையன்ஸின் திட்டமாகும்.
ஸ்கூட்டி: இது ஒரு பக்கம் இருக்க ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பிராண்டில் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டியையும் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிமீ செல்லும் வகையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டி இருக்கும் எனத் தெரிகிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இதன் விலை இருக்கும் என்றும் இது எலக்ட்ரிக் டூ வீலர் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ரிலையன்ஸ் தரப்பில் ஜியோ ஸ்கூட்டி குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications