இன்ஸ்டாவில் ஒரே ஒரு லிங்க்கை தொட்ட இளம்பெண்.. வங்கி கணக்கிலிருந்து ரூ.6.3 லட்சம் மாயம்! மக்களே உஷார்
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து வந்துள்ளார். அதில் பகுதி நேர வேலை பற்றிய விளம்பரத்தைப் பார்த்து அந்த பெண் ஆர்வமாக கிளிக் செய்துள்ளார். இதுதான் அந்த பெண் செய்த முதல் தவறு. அதன்பிறகு மோசடி கும்பல் சில நாட்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ. 6.37 லட்சத்தை ஏமாற்றிப் பறித்துள்ளனர்.
இந்த காலத்தில் எல்லாமே டிஜிட்டல் என்று இருக்கிறது. ஆன்லைன் மூலமாகவே நாம் நினைக்கும் எல்லா விஷயங்களையும் செய்ய முடிகிறது. ஆனால், சில நேரங்களில் இது மக்களுக்கு எதிராகவும் திரும்புகிறது.

Image: AI created
சைபர் மோசடி செய்யும் கும்பல் அப்பாவி மக்களைக் குறிவைத்து பணத்தைப் பறிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நடந்துள்ளது.
மோசடி: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் கோராய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்ட்கிராமை பார்த்து வந்து இருக்கிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றில் பார்ட் டைம் வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதை கிளிக் செய்த அந்த பெண் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6.37 லட்சத்தை இழந்துள்ளார். இதில் இருந்து லிங்க்கை கிளிக் செய்தவுடன் மோசடிக்காரர்களிடம் அவர் 6.37 லட்ச ரூபாயை இழந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 30ம் தேதி அரங்கேறியுள்ளது. அன்று காலை 11 மணியளவில் அந்த இளம்பெண் வழக்கம் போல இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் ஈஸியாக பணம் சம்பாதிக்கும் பகுதிநேர வேலை தங்களிடம் இருப்பதாக ஒரு வீடியோ வந்துள்ளது. வெறுமன இன்ஸ்ட்கிராம் ரீல்ஸ்களை லைக் செய்தால் போதும் அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று அதில் கூறியிருக்கிறார்கள்.
லிங்க்கை கிளிக் செய்த பெண்: அட இது ஈஸியாக இருக்கே.. நாமும் ஃப்ரீ டைமில் பணத்தைச் சம்பாதிக்கலாமே என நினைத்து அந்த பெண்ணும் இன்ஸ்டா ரீல்ஸில் இருந்த லிங்க்கை கிளிக் செய்து இருக்கிறார். அது டெலிகாரம் க்ரூப் ஒன்றுக்கு போய் இருக்கிறது. அந்த க்ரூப்பிலும் அவர் இணைந்துவிட்டார்.
பின்னர் மோசடி கும்பல் தங்களை ஒருங்கிணைப்பாளர் போலக் காட்டிக் கொண்டு, என்ன செய்தால் பணம் கிடைக்கும் என்பதை விளக்கியுள்ளனர். அதாவது அவர்கள் அனுப்பும் லிங்குகளில் இருக்கும் வீடியோவுக்கு லைக் செய்ய வேண்டும். லைக் செய்தாலே பணம் கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள். முதலில் சொன்னது போலவே சிறிய தொகையை அனுப்பியுள்ளனர். இது அவர்கள் மீது அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Image: AI created
ரூ. 6 லட்சம் மோசடி: அதன் பின்னர் அந்த மோசடி கும்பல், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதிகப் பணம் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் மட்டும் இந்த பணம் தர வேண்டும் என்றும் இதைக் கொடுத்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். இதை நம்பிய அந்த பெண் மூன்று முறை பணம் அனுப்பி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக மொத்தம் ரூ.6.37 லட்சத்தை அவர் அனுப்பி இருக்கிறார்.
புகார்: ஆனால், அதன் பிறகு அந்த பெண்ணுக்கு பணம் கிடைக்கவில்லை. மாறாக வரி என்று சொல்லிக் கூடுதல் பணத்தை அந்த கும்பல் கேட்டுள்ளது. அப்போதுதான் தன்னை அவர்கள் ஏமாற்றிவிட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர் அங்குள்ள போரிவலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல ஈஸியாக பணம் சம்பாதிக்கலாம் என்று யாராவது மோசடி செய்ய முயன்றால் தயவு செய்து அதில் ஏமாற வேண்டாம்!












Click it and Unblock the Notifications