Recharge: கூடுதல் டேட்டா வேண்டுமா? ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் .. எந்த நிறுவனம் வழங்கும் பிளான் பெஸ்ட்?
சென்னை: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள், தினசரி டேட்டாவை கூடுதலாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக மிகவும் மலிவான டேட்டா வவுச்சர்களை வழங்குகின்றன.
இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமான ஜியோ, இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏர்டெல், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல ஒரு நாள் செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களை வழங்குகின்றன. இந்த டேட்டா வவுச்சர்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வேலிடிட்டி திட்டத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே பயனர்களுக்கு வேலை செய்யும். 1 நாள் செல்லுபடியாகும் காலம் கொண்ட ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியாவின் பிளான்கள் பற்றி பார்ப்போம்.
ஏர்டெல் பிளான்
ஏர்டெல்லின் மலிவான ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட டேட்டா வவுச்சர் ரூ.22க்கு கிடைக்கிறது. இந்த டேட்டா வவுச்சர் 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த வவுச்சரில் கூடுதலாக வேறு எந்த நன்மையும் இல்லை. பயன்படுத்தப்படாத டேட்டா ஒரு நாள் முடிந்த பிறகு காலாவதியாகிவிடும். இந்த வவுச்சர் ரீசார்ஜ் செய்த அதே நாளில் முடிவடைகிறது என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் இரவு 10 மணிக்கு ரீசார்ஜ் செய்தால், நீங்கள் இந்த வவுச்சரை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட டேட்டா வவுச்சர் ரூ.19க்கு கிடைக்கிறது. இது ஏர்டெல் வழங்கும் திட்டத்தை விட சற்று மலிவானது. இந்த திட்டத்திலும் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. பயனர் ஒரே நாளில் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால் இது காலாவதியாகிவிடும்.
வோடஃபோன் ஐடியா
வோடஃபோன் ஐடியாவின் மலிவான ஒரு நாள் வேலிடிட்டி டேட்டா வவுச்சர் ரூ.23க்கு கிடைக்கிறது. பட்டியலில் இதுவே மிகவும் விலை உயர்ந்தது. மற்ற நிறுவனங்களின் டேட்டா வவுச்சர் போல இதுவும் அதே நாளில் நள்ளிரவில் காலாவதியாகிறது. செல்லுபடியாகும் காலம் மீண்டும் ஒரு நாள் மட்டுமே. 1GB டேட்டா பயன்படுத்தப்படாவிட்டால் காலாவதியாகி விடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications