Netflix, Jio hotstar எல்லா ஓடிடியும் ஒரே பேக்கில்.. செமத்தியான பிளான்களை அறிமுகம் செய்தது ஏர்டெல்
சென்னை: ஏர்டெல் நிறுவனம், ஒரே பேக்கில் பல ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்களை வழங்கும் செம பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் ஆல்-இன்-ஒன் OTT பொழுதுபோக்கு பேக்குகளை ப்ரீபெய்டு பயனர்களுக்காக ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5, மற்றும் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உட்பட 25+ முன்னணி OTT தளங்களை வெறும் 279 ரூபாய்க்கு வழங்குகிறது ஏர்டெல். அன்லிமிட்டெட் டேட்டாவுடன் கூடிய ஓடிடி பேக்கேஜ் பேக்கும் உள்ளது.

ஏர்டெல்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்குப் புதிய பொழுதுபோக்குப் பேக்குகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லிவ் உள்ளிட்ட 25+ சிறந்த OTT தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குவதன் மூலம் இவ்வளவு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தியாவில் வழங்கும் நிறுவனமாக மாறியுள்ளது ஏர்டெல்.
1 மாதத்துக்கு வெறும் ரூபாய் 279 என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில் தொடங்கி ரூபாய் 750 மதிப்புள்ள பல்வேறு பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களைக் கொண்ட பேக்கையும் வாடிக்கையாளர்கள் அணுகலாம். இதன் மூலம் இவ்வளவு அதிகமான OTT ஸ்ட்ரீமிங் ஆப்ஷன்களைஅணுக அனுமதிக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது.
ஓடிடி + அன்லிமிட்டட்
அன்லிமிட்டட் பொழுதுபோக்கு வசதிக்காக அன்லிமிட்டட் 5G டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் கொண்ட எண்டர்டெயின்மென்ட் பேக்குகளை ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 598 ல் மொத்தமாக சேர்த்து வழங்குகிறது.
ஸ்பெஷல் பேக்குகள் விவரம்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆப் வழியாக நேரடிச் சந்தா
நெட்ஃபிளிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோ ஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
1 மாதம்
₹ 279
ப்ரீபெய்டு மட்டும் உள்ளடங்கிய பேக்குகள்:
நெட்ஃபிளிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோ ஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
1 மாதம்
₹ 279
(1 மாதத்திற்கு தினசரி 1 ஜிபி டேட்டா உட்பட)
நெட்ஃபிளிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
28 நாட்கள்
₹ 598
நெட்ஃபிளிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
84 நாட்கள்
₹ 1729
ஓடிடி தளங்கள்
வாடிக்கையாளர்கள் இப்போது நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லிவ், லயன்ஸ் கேட்ப்ளே, ஏஎச்ஏ, சன் நெக்ஸ்ட், ஹோய்சோய், Eros Now, மற்றும் ஷெமாரூமீ போன்ற முன்னணி OTT தளங்களில் இருந்து பல்வேறு வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் டாகுமெண்டரி படங்களை ஒரே தொகுப்பின் மூலம் அணுகலாம்.
இந்தப் பல்வேறு OTT சேவைகளை ஒரு மலிவு விலை தொகுப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்டு பயனர்களின் மாறிவரும் பொழுதுபோக்கு விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறது. இது ஒவ்வொரு ஓடிடி தளமாக தனித்தனியாக சப்ஸ்கிரைப் செய்யும் சிக்கல்கள் இல்லாமல் அவர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் உட்பட 16 க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச, பாலிவுட் மற்றும் பிராந்திய கண்டெண்ட்டை சிரமமின்றி கண்டுகளிக்க உதவுகிறது.












Click it and Unblock the Notifications